மாங்காய் தொக்கு
தேவையான பொருட்கள்

புளிப்பான மாங்காய் - 1
மிளகாய் வற்றல் - 10 முதல் 15 வரை
பெருங்காயம் - சிறு துண்டு
வெந்தயம் - 1 ஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 கரண்டி
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையானது

செய்முறை

மாங்காய் தோல் நீக்கி வறுவலுக்கு சீவுவது போல் சீவி உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும். மாங்காயில் உப்பு போட்டால் அதுவே நீர் விட்டு கொள்ளும்.

வாணலியை அடுப்பில் போட்டு பெருங்காயம், வெந்தயம் இவற்றை எண்ணெய்விடாமல் வறுக்கவும்.

2 ஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந் ததும் மிளகாய் வற்றலை (இரண்டாகக்கிள்ளி) வறுக்கவும்.

வறுத்த வெந்தயம், பெருங்காயம், மிளகாய் வற்றல் இவற்றை தனித்தனியே மிக்ஸியில் பொடி செய்யவும். மீதி உள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு தாளித்து அரைத்த மாங்காய் விழுதை போட்டு சுமார் 10 நிமிடங்கள் கிளறவும்.

நன்றாக வெந்ததும் (எண்ணெய் தனியாக பிரிந்து வரும்). மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயம் பொடி போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் புளிப்பான ஆப்பிளையும் தொக்கு செய்யலாம்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com