இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் 1, 2007 முதல், நிறுத்தமற்ற நேரடி விமான சேவையைத் தொடங்க உள்ளது. மும்பையிலிருந்து இந்த விமானம் நியூ யார்க்கின் ஜான் எ·ப். கென்னடி விமான நிலையத்துக்குச் செல்லும். அதனால் பயணிகள் முன்பு போல் நடுவில் இறங்கி வேறு விமானத்தைப் பிடிக்கும் தொந்தரவு இனி இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய-அமெரிக்க நேரடிப் பயணத்திற்கு இது புதுவரவு. பயண நேரம் 15 மணி. சென்று திரும்புவதற்கான முதல் வகுப்புக் கட்டணம் ரூ 4.58 லட்சம், கிளப் வகுப்பு ரூ 2.25 லட்சம், எகானமி வகுப்பு ரூ. 54,700 என்று கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விரைவில் பெங்களூரு, லாஸ் ஏஞ்சலஸ் இடையே தொலைதூர விமான சேவை கிங் ·பிஷர் நிறுவனத்தாரால் துவக்கப்பட உள்ளது.
அரவிந்த் |