செப்டம்பர் 2006: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக
5. தஞ்சத்திற்கு ஒரு பலகாரம் இருக்கும் பாத்திரமோ? (6)
6. இழு! ஐயோ தாங்க முடியவில்லையே! (2)
7. பாடலுடன் லயம் சேர்த்தது உயர்வாக இல்லை (4)
9. குடை இணைக்கப்பட்ட படுக்கையில் காத்திருப்பார்! (4)
10. ஒரு ராகம் உள்ளேயே, ம், தொடங்கு (4)
12. நடு உடல் பாகம் சிகிச்சைக்குப் பிறகு கந்தா! (4)
13. & 12. நெடு. அறுபத்து நான்கு கட்டுக்கடங்காத கயலை ஆள்க (2, 4)
14. அஸ்திவாரமில்லா வீட்டில் வாழ்பவரோ? (6)

நெடுக்காக
1. வாட்டுங் குளிர் காற்றில் நாற்றம் (2)
2. கடவுள்களின் செல்லப் பிராணிகளை மரியாதைக்குப் பொருத்துவது முன்பே அழை (4)
3. நீண்டகாலப் பயிரோடு வலையில்லா நீர்த்துளியால் பணத்தை ஈட்டு (4)
4. முகூர்த்தங்கள் மிகுந்த காலத்தில் பெரிய ஆணி குத்தி வதம் (3, 3)
8. இறுதியாக வசந்தா வடக்கு சூரியன் வந்த வயல் கீரையை ஆய்வது (6)
11. இவ்வரத்தைப் பெற்றோர் செத்தால் அவ்வளவுதான்! (4)
12. [13இல் பார்க்கவும்] (4)
15. பட்டை சுமக்கும் (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை செப்டம்பர் 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@chennaionline.com. செப்டம்பர் 25க்குப் பிறகு, விடைகளை http://thendral.chennaionline.com என்ற சுட்டியில் காணலாம்.

ஆகஸ்டு 2006 புதிர்மன்னர்கள்

1. குமார் ராமசுப்ரமணியன், நியூ ஜெர்ஸி
2. எல்.வி. நாகராஜன்
3. மனோகரன் பாலசரஸ்வதி

புதிர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.

ஆகஸ்டு 2006 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக: 5. ஏறு, 6. வைராக்கியம், 7. வாய்த்த, 8. அகில, 9. துறவி, 11. மாவிலை, 13. சாவகம், 16. கன்னியம்மா, 17. படை

நெடுக்காக: 1. தறுவாய், 2. சுவைத்தது, 3. ஆக்ரா, 4. மயங்கி, 10. விசாலமான, 12. வியன்னா, 14. கம்பளி, 15. இயல்.

© TamilOnline.com