இதுவரை இசையமைப்பாளராக மட்டுமே அறியப்பட்ட பரத்வாஜ் புதிய அவதாரம் எடுத்துள்ளார். தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் ஒப்புதலுடன் 'பரத்வாஜ் ஸ்கூல் ஆ·ப் மியூசிக்' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கும் இவர், அதன் மூலம் இசைப் பயிற்சியையும், பல்வேறு நுணுக்கங் களையும் கற்றுத் தர உள்ளார். ஓராண்டு பட்டய வகுப்பாக (டிப்ளமோ) நடத்தடப்பட உள்ள இதில், மெல்லிசை பற்றியும், அதன் நுணுக்கங்கள், சிறப்புகள் போன்றவை பற்றியும் பாடத்திட்டங்கள் இடம் பெற்றிருக்கும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயிற்சிகள் ஆரம்பம். இதில் முக்கியமான விஷயம், பணிபுரிபவர் களின் வசதிக்காக, தொலைதூரக் கல்வித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்பதுதான். ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பரத்வாஜ் மற்றும் குழுவினரின் நேரடி விளக்க செய்முறைப் பயிற்சியும் உண்டாம்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் |