'சதர்ன் ஸ்பைஸ்' வானொலி நிகழ்ச்சி
Dhoom 89.3 FM என்னும் பண்பலை ஒலிபரப்பு நியூ ஜெர்ஸியில் உள்ளதொரு சமுதாய வானொலி நிலையம். இதன் ஒலிபரப்பை www.dhoomfm.com என்ற வலை தளத்திலும் கட்டணமின்றிக் கேட்க முடியும். பிரதி புதன்கிழமை தோறும் இரவு 7 முதல் 9 மணிவரை (ET) இந்தத் தமிழ் ஒலிபரப்பைக் கேட்கலாம்.

வெங்கி சடகோபன் இந்த நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு இதில் உதவியாக இருப்பவர் அஜிதா. பொதுவாக மார்கழி, பொங்கல், மே மாதம், சலங்கை ஒலி என்பது போல ஒரு மையக் கருத்தை எடுத்துக் கொண்டு அதற்கேற்பப் பாடல்கள் வழங்கப் படுகின்றன. நேயர் விரும்பிக் கேட்கும் பாடல்களும் வழங்கப்படுகின்றன. 'தொலைபேசியில் அழைப்பவர்கள் தமது பேச்சைக் குறைத்துக் கொண்டால் 2 மணி நேரத்தில் 20 பாடல்களை ஒலிபரப்பலாம்' என்கிறார் வெங்கி. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் நிகழ்ச்சியில் அறிவிக்கப் படுகிறது.

'சதர்ன் ஸ்பைஸ்' என்ற பெயரில் பல வணிக நிறுவனங்கள் இருப்பதால் வாசகர்கள் வேறொரு பெயரைக் கூறலாம். நிகழ்ச்சியைக் குறித்து உங்கள் ஆலோசனை களையும் கருத்துக்களையும் வெங்கி சடகோபன் வரவேற்கிறார். southernspice@dhoomfm.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பலாம்.

சதர்ன் ஸ்பைஸ் செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com