தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 3 சர்க்கரை - 2 கிண்ணம் பால் - 1/2 கிண்ணம் நெய் - 1 கிண்ணம் ஏலக்காய் - 6 முந்திரிப் பருப்பு - 8
செய்முறை
முதலில் பீட்ரூட்டை நன்றாகக் கழுவி முழுதாகக் குக்கரில் வேகவைத்து எடுக்கவும். தோலை உரித்தபின் பீட்ரூட்டில் பால் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் அதில் சர்க்கரைப் பாகு வைக்கவும்.
பாகு முற்றி வரும்போது அரைத்து வைத்திருக்கும் பீட்ரூட் விழுதை அதில் போட்டு, நெய் விட்டு, நன்றாக கிளறிக் கொண்டே வரவும்.
பாத்திரத்தின் ஓரங்களில் நெய் கொதித்துச் சுருண்டு வரும்போது இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி ஆகியவற்றைப் போடவும்.
வேக வைக்காமல் கொப்பரைத் துருவியில் துருவி நெய்விட்டு வதக்கியும் இந்த அல்வாவைச் செய்யலாம்.
தங்கம் ராமசாம |