அசோகா அல்வா
தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு - 1 கிண்ணம்
சர்க்கரை - 3 கிண்ணம்
நெய் - 1 1/2 கிண்ணம்
பால் - 2 கிண்ணம்
ஏலக்காய் - 6
முந்திரிப் பருப்பு - 1
வண்ணப் பொடி - சிறிதளவு
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு

செய்முறை

வெறும் வாணலியில் பயத்தம்பருப்பைச் சற்றுச் சிவக்க வறுத்து எடுக்கவும்.

வறுத்து எடுத்த பருப்புடன் பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும். பருப்பு நன்றாகக் குழைந்ததும் எடுத்து மிக்சியில் மைய அரைத்து எடுக்கவும்.

பின்பு சர்க்கரைப் பாகு வைக்கவும். அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே வரவும். பாகு முற்றியதும் அரைத்த விழுதைப் போட்டு நன்றாகக் கிளறவும். இடையிடையே நெய் விட்டுக் கிளற வேண்டும்.

பின்பு வண்ணப் பொடி, ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சேர்க்கவும். முந்திரியைப் பொன்னிறமாக வறுத்துச் சேர்க்கவும்.

அல்வா நன்றாகச் சுருண்டு பந்து போல் வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

இந்த அல்வாவை வெறும் தண்ணீரில் வேகவிட்டு, கோவா சேர்த்தும் செய்யலாம்.

தங்கம் ராமசாம

© TamilOnline.com