தமிழ்நாட்டைச் சேர்ந்த Dr. மதிவாணன் "பாவாணர்" நூற்றாண்டு விழாவையும் FeTNAவின் 15வது வருடாந்திர தேசிய தமிழ் மாநாட்டையும் ஜூலை 4ம் தேதி துவக்கிவைத்தார். பிரபல தமிழ் அறிஞர் தேவநேய பாவாணரின் மாணவரான இவர், தனது ஆசான் தமிழுக்கு ஆற்றிய விரிவான தொண்டுகளை விவரித்தார். தமிழே மிகவும் பழமையான மொழி என்று நிரூபித்து மாக்ஸ் ம்யூலரின் கூற்றைத் தவறென நிலைநாட்டினார். தமிழர்களை சமஸ்கிருத ஆதிக்கத்திலிருந்து மீட்ட தூயத் தமிழ் இயக்கத்தில் பல தமிழர்களும் கலந்து கொண்ட தற்குச் சான்றுகளைக் காட்டினார்.
உலகின் பல்வேறு பாகங்களில் வாழும் தமிழர்கள் பலரது கவிதைகள் கட்டுரைகள் அடங்கிய சிறப்பு விழா மலரும் வெளியிடப்பட்டது. அமெரிக்கா மற்றும் கனடாவின் பல நகரங்களிலிருந்து தமிழ்ச் சங்கங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், விவாதங்கள், தமிழில் இசை மற்றும் நாடகப் படைப்புகள் ஆகியவற்றில் கலந்து கொண்டன.
மாநாட்டின் துவக்க நாளன்று, தமிழகத்தின் புகழ் பெற்ற நாடகக் குழுவான TKS Brothers குழுவின் திரு. T.K.S. கலைவாணன், தலைச் சிறந்த தமிழ் அரசரான ராஜ ராஜ சோழன் (10வது நூற்றாண்டு) வாழ்க்கை வரலாற்றை அளித்தார். ராஜ ராஜ சோழனின் சாம்ராஜ்யன் உலக சாம்ராஜ்யங்களின் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இவரது மக ராஜேந்திர சோழனின் அரசு தெற்காசியாவையும் உள்ளடக்கியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியர் வழுதையூர் மாணிக்கம் தனது தமிழ் மரபிசை (தற்கால கர்நாடக இசை) மூலம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
நாடுமுழுவதிலிருந்தும் வந்திருந்த தமிழ் பள்ளிக் குழந்தைகள் வெள்ளிக்கிழமை காலை நேர நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றனர். அன்று மதியம் பல மாநிலங்களின் FeTNAவின் உறுப்பினர் சங்கங்கள் கேளிக்கை நிகழ்ச்சிகளை வழங்கின. பல அறிஞர்களின் சிந்தனை தூண்டும் பேச்சுக்களும் இடம் பெற்றன. தமிழ்ப் பண்டித தம்பதியினர் திரு R. மோகனும் திருமதி நிர்மலா மோகனும் "இளைய சமுதாயத்தின் வளர்ச்சி: முக்கிய பங்கு வகிப்பது குடும்பமா சமூகமா?" என்ற தலைப்பில் சொற் பொழிவாற்றினார்கள். தமிழ்த் திரைப்படக் கலைஞர் கள் சத்யராஜ், குஷ்பு மற்றும் பலர் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியை வழங்கினர். மாலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னணி வழக்கற ¢ஞரும் சிறந்தப் பேச்சாளருமான செல்வி அருள் மொழி, பெண் உரிமைப் பற்றி ஒரு உணர்ச்சிபூர்வ அதே சமயம் நகைச்சுவை கலந்த உரையினை அளித்தார். திரு. டேனி டேவிஸ் தனது உரையில் கலாச்சாரப் பெருமை பற்றிக் கூறினார். இந்திய பாராளுமன்ற உறுப்பினர் திரு. வைகோ இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பற்றி உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினார். கனடா நாட்டின் டொராண்டோ வைச் சேர்ந்த ஒரு யுவதிகள் குழு தமிழகத்தைச் சேர்ந்த திரு. முரளிதரன் மற்றும் கனடாவைச் சேர்ந்த நடன ஆசிரியர் திருமதி. கிருபாநிதி ஆகியோரும் அளித்த குறுகிய காலப் பயிற்சி கொண்டு தலைச்சிறந்த காவியமான சிலப்பதிகாரத்தை இசை நாட்டிய வடிவில் அளித்தனர். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
தமிழ்ச் சங்கங்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சி கள் சனிக்கிழமையும் தொடர்ந்தது. அன்று மதிய நிகழ்ச்சிகளில், "We sow it and we will reap it!" என்ற தலைப்பில் தமிழ் அறிஞர் கவிஞர் Dr. R. மதிவாணன் தலைமையில் கவிதைகள் வழங்கப் பட்டன. இலங்கையில் இருந்து வந்த தமிழ் அறிஞர் சிவதம்பி, சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு "Escape of Tamil Culture in the Literary Sense" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
தமிழ்நாடு ·பவுண்டேஷனின் (Tamil Nadu Foundation - TNF) தலைவர் திரு. P. துக்காராம் மற்றும் சென்னையைச் சேர்ந்த திரு. சந்திரசேகர், தமிழகத்தில் TNF மேற்கொண்டுள்ள சமூகத் தொண்டுகள் பற்றி விவரித்தார்கள். University of Illinois சட்டத்துறை பேராசிரியர் ·பிரான்சிஸ் போயல் "Tamils' Right to Self-Determination under International Law" என்ற தலைப்பில் உரையாற்றினார். FeTNA தலைவர் திரு. V.J. பாபு, இந்தக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றதற் குக் காரணமான அனைவரையும் மனதாரப் பாராட்டி, நன்றி தெரிவித்தார். நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த திரு. சிவராமன் 2003 மற்றும் 2004 வருடங்களுக்கான FeTNAவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, பதவி ஏற்றார். திருமதி P. சுசீலா, T.M. செளந்திரராஜன் மற்றும் ஒண்டாரியோவில் அமைந்த "அக்னி" என்ற இளமை ததும்பும் ஆர்வமிக்க தமிழ் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சியோடு விழா முடிவுற்றது.
விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு ஒரே சமயத்தில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் வாய்ப்பு இருந்தது. மலேசிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடமான "தமிழை எப்படி கற்பது - விரைவாக" என்ற 6 மணி நேரத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கும் பாடதிட்டம் இளைஞர்களுக்காக மலேசியவிலிருந்து வந்த தமிழ் அறிஞர் பேராசிரியர் கலியபெருமாளால் வழங்கப்பட்டது இத்தகைய ஒரு நிகழ்ச்சி. தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் K. புகழேந்தியின் கைவண்ணத்தில் உருவான நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, தந்தை பெரியார் ஆகியோரது ஓவியங்கள் அடங்கிய ஒரு கண்காட்சியும் இடம் பெற்றது. தேசிய தமிழ் இளைஞர்கள் சங்கம் இளைஞர்களுக்குத் தேவை யான விஷயங்களைக் கொண்டு ஒரு மாநாடு நடத்தியது. இந்த இளைஞர் அமைப்பு, தலைவர் முத்துகுமார் செந்தில் மற்றும் துணைத் தலைவர் குமார் இளங்கோவன் தலைமையிலான ஒரு புது நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுத்தது. |