கலி·போர்னியா முத்தமிழ் சங்கம்
''கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு அமெரிக்கர்கள் அவ்வளவாக வருவதில்லை. பெரிய அரங்குகளில் நிகழ்ச்சியை வைத்துக்கொண்டால் முக்காலுக்கு மேல் இருக்கைகள் காலியாக இருக்கும்.'' - இதெல்லாம் பொதுவாக பலருடைய அபிப்ராயம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்த கருத்தை உடைத்து எறிந்தது ஜூலை மாதம் பதிமூன்றாம் தினத்தன்று கலி·போர்னியா முத்தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வயலின் எல். சங்கரின் நிகழ்ச்சி. இவரும் ஜின்ஜர் (மொத்தம் மூன்று ஆங்கில ஜி) என்ற இளம்பெண்ணும் டபிள் வயலின் வாசிக்க தபலா மையிஸ்ட்ரோ ஜாகிர் உசேன் பக்கவாத்தியம்.

சாவித்திரி என்ற புதிய ராகத்தில் கச்சேரி ஆரம்பித்த போது சங்கர் ஆலாபனையை முதலில் தன் குரலில் வழங்கினார். வயலினில் ஆலாபனை செய்து - பாட்டு முடிந்து - மாறி மாறி கல்பனா ஸ்வரம், தொடர்ந்து தபலா ஆவர்த்தனம் என்று ஹிந்துஸ்தானி சம்பிரதாயபடி வாசித்தார்கள். சங்கரின் கச்சேரிக்ளுக்கு பல வட இந்தியர்களும் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கச்சேரிக்கு முன் மேடையேறி பேசிய திரு ஜான் டேவிட் அவர்கள் கலி·போர்னியா முத்தமிழ் சங்கம் சமீபத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் இதுவரை அவர்கள் மிக சிறிய வகையில்தான் நிகழ்ச்சிகள் நடத்தியதாகவும் சொன்னார். இதுதான் முதல் பெரிய வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்றால் அதை மிக வெற்றிகரமாக செய்து முடித்தது மிகவும் பாராட்ட பட வேண்டிய விஷயம். இதற்காக அவர்கள் எந்த பத்திரிகையிலும் விடாமல் முழு பக்க விளம்பரங்கள் வழங்கி கொண்டேயிருந்தாலும், மியூசிக் சர்கிள் திரு. ஹரிஹர் ராவின் உதவியுடன் தபால் மூலம், தொலைபேசி மூலம் விஷயத்தை தெரிவித்ததும் மூச்சுவிட நேரமில்லாமல் கடந்த இரண்டு மாதங்களாக உழைத்ததற்குப் பலன் நிச்சயம் இருந்தது. ஏனென்றால் லாஸ்ஏஞ்சல்ஸின் மையத்தில் இருக்கும் மிகப் பெரியதான வாட்ஸ்வொர்த் ஆடிட்டோரியத்தில் ஒரு இருக்கையும் காலி இல்லாமல் நிரம்பியிருந்ததற்கு எல். சங்கரின் பிரபலம் மட்டுமல்ல, நிச்சயமாக முத்தமிழ் சங்கத்தின் விடா முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். டென்னிஸ் புகழ் விஜய் அமிர்த ராஜ் அவர்களின் வரவேற்புரையோடு ஆரம்பித்து வைத்த அமிர்தராஜ் அவர்களின் வரவேற்பு புறையோடு ஆரம்பித்து வைத்த இதைப் போல மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்த தமிழ் மொழி, கலாசாரம் போன்றவற்றை அமெரிக்கர், மற்றும் தமிழ் அல்லாதவர் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பும் கலி·போர்னியா முத்தமிழ் சங்கம் மேலும் மேலம் பல்லாண்டு காலம் வாழ்க. வளர்க!!

கீதாபென்னேட்

© TamilOnline.com