நேர்மையான போலிஸ் அதிகாரி
இந்திப் படத் தயாரிப்பாளர்கள் தற்போது தென் இந்திய நட்சத்திரங்களை நேர்மையான போலிஸ் அதிகாரி வேடத்திற்கு நம்பி இருக்கிறார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ராம் கோபால் வர்மாவின் "கம்பெனி" படத்தில் இந்த வேடத்தில் நடித்தார். இயக்குனர் சுனில் போரா தனது "யுத்" படத்திற்கு ஆக்ஷன் கிங் அர்ஜுனை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் கெளரவ வேடத்தில் நடிக்கிறார். மும்பாய் பத்திரிக்கையாளர்களிடையே அர்ஜுனை "தேசப் பற்று மிக்க ஹீரோ" என்று அமிதாப் அறிமுகப்படுத்தினார். இது அர்ஜுனின் முதல் இந்திப் படம் அல்ல. "நான் K.C. பொகாடியாவின் படம் ஒன்றில் நடித்தேன். படம் 70 சதவிகிதம் முடிந்தது. பின்னர் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இன்று வரை அதைப் பற்றி நான் கேள்விப்படவேயில்லை" என்றார் அர்ஜுன்.

-

© TamilOnline.com