Dialog
ஏண்டா, வாழைப்பழம்னு சொல்லாம வாளப்பளம்னு சொல்லற?

அப்படியே சொல்லி பளகிடிச்சி.

இங்கிலிஷில பேசறச்சே, போலியாக ஆக்சண்டுன்னு (accent) வாயப்போட்டு அப்படி கொழப்பற.. அந்த கொழப்பல கொஞ்சம், தமிழ்ல காட்டினின்னா, ழ ழி தன்னால வரும்டா.

******


கான்கார்ட் முருகன் கோவிலில்

என்னாடா, இப்படி அரை டிரவுசர் (shorts) போட்டு சாமி கும்பிட வந்துட்ட?.

டேய். பக்திதாண்டா முக்கியம். அங்க பாரு, சாமியே கோவணத்தோட இருக்காரு. கண்டுக்க மாட்டாருடா.

******


நண்பர் வீட்டில், குழந்தைகளோடு சம்பூர்ண இராமாயண வீடியோ பார்க்கும் போது,

ஆமா, இராவணாதியர் எல்லாம், ராக்ஷசர்கள் சரி. கூட நிறைய, நம்ம போல மக்கள் எல்லாம் இருக்கிறமாதிரி காட்டிருக்காங்களே எப்படி?

ஒருவேள immigrants ஆக இருக்கும் போல. போடா வானரம், அனுபவிக்கணும்டா, இதெல்லாம் ஆராயக்கூடாது.

******


நண்பர் வீட்டில், ( நண்பரின் மனைவி ஒரு பாட்டு டீச்சர்)

இப்பெல்லாம் கர்நாடக சங்கீதம் சொல்லித்தருவதற்கு எல்லா இடத்துலயும் 60 டாலர் fees வாங்கறாங்களாம். நான் முப்பதுன்னு நினைச்சேன்?.

நண்பர்: முப்பது வாங்கினா, அதுக்கு ஏத்தா மாதிரி தான் இருக்கும் சரக்கும்.

(நண்பரின் மனைவியிடம்) அது சரி, ஆமா நீங்க எவ்ளோ வாங்கறீங்க?

நண்பரின் மனைவி: அடுத்த மாசத்திலிருந்து 60 டாலர் வாங்கறதாக இருக்கேன்

******


அம்மா, நீ ஏன் அந்த ஆன்டிய வா, போன்னு சொல்லி கூப்பிடற

அவங்க என்னவிட சின்னவங்க. அதனால்தான்.

இல்லம்மா, நீயே பாரு அவங்கதான் உன்னவிட பிக்கா (Big) இருக்காங்க.

பேசாம இருடி, அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நான் சொன்னது வயசுல.

******


பே ஏரியால புதுசா பவன் ஓட்டல் திறந்திருக்காங்கன்னு போனேனா!. சர்வீஸ் சுத்த மோசம், டிபன் அளவு ரொம்பக் கம்மிடா?

டேய், ஓட்டல் புதுசுனால, முதல் ரெண்டு நாளு இலவசம்னு சொன்னாக்க, இப்பிடியாடா அடிச்சிகிட்டு போறது. தானம் குடுத்த மாட்ட பல்ல புடுங்கி பாக்காதே டோய். இன்னும் ஒரு சான்ஸ் குடும்மா?

தோடா. என்னா, கையில எதாவது காசு வாங்கிக்கிட்டியா. இப்பிடி ஒரெடியா சைடு அடிக்கற.

ஸ்ரீ கோண்டு

© TamilOnline.com