தோழி: ஏன் இப்படி சோகமா இருக்கே?
தோழி: என் கணவர் கல்யாணம் ஆன புதுசுலே 'என் சுவாசக்காற்றே'ன்னு என்னைக் கொஞ்சுவாரு... இப்போ என்னடான்னா 'என் ஊதல் காற்றே' ன்னு என்னைப் பார்த்து ஏசறாரு
******
நண்பன்: ஏண்டா! நீ எப்பவும் ஸில்வெஸ்டர் ஸ்டாலோன் நடிச்ச பழைய படங்களையே பார்த்துக்கொண்டே இருக்கியே? உனக்கு அலுக்கலே!
நண்பன்: இல்லைடா, அவர் நடிச்ச படங்கள்னா எனக்கு ராம்போ, ராம்போ பிடிக்கும்!
******
நண்பன்: இப்பத்தான் ஊட்டியிலிருந்து நேரே வரேன்.
நண்பன்: (அவர் கையைத்தொட்டுப்பார்த்துவிட்டு) அப்படியா, ஆனால் உடம்பு சில்லுன்னு இல்லையே!
******
தோழி: இது என்ன பெரிய பெரிய அண்டாவா உன் வீட்டு வாசல்லே இறங்குது!
நடிகை: எல்லாம் டைரக்டர் செய்யற வேலை! நான் 'எப்பவும் எனக்கு சின்ன பாத்திரமா நடிக்கக்கொடுக்கிறீங்களே... பெரிய பாத்திரமா கொடுங்க'ன்னு கேட்டதுக்கு இப்படிப்பண்ணிட்டாரு!
ஹெர்கூலிஸ் சுந்தரம் |