பிழைப்பைத் தேடி அயல்நாடு வந்தோம் பிறந்து வளர்ந்த அந்நாடா உழைத்துப் பிழைக்கும் இந்நாடா எதுதான் நமக்குத் தாய்நாடு?
உற்றம் சுற்றம் அங்கே என்றால் நட்பும் பிழைப்பும் இங்கே அன்றோ நினைத்தால் மனதில் குழப்பம்தான் எதுதான் நமக்குத் தாய்நாடு?
தோலின் நிறத்தால் இங்கே பிரித்தால் மொழிகள் மதத்தால் அங்கே பிரித்தார் எங்கும் நம்மை பிர்த்தே பார்த்தால் எதுதான் நமக்குத் தாய்நாடு?
பிறந்தது வளர்ந்தது அங்கே என்றால் (நம்) குழந்தைகள் பிறந்ததும் வளர்ந்ததும் இங்கே அன்றோ எண்ணிப் பார்த்தால் குழப்பம்தான் எதுதான் நமக்குத் தாய்நாடு?
பிறந்த வீட்டை துறந்துவிட்டு புகுந்த வீட்டில் இணைந்துவிடும் நம் பெண்களைப் பார்த்தால் புரிந்துவிடும் புகுந்த இடமே அவர் வீடு
பிறந்த நாட்டைத் துறந்துவிட்டு புதிய நாட்டில் இணைந்துவிட்டோம் இதுதான் நமக்குத் தாய்நாடு (இனி) இதுதான் நமக்கு தாய்நாடு
God Bless America
நாக். A. நாகராஜன். |