"அது CAMANA இல்லை CAMAGA" மற்றும் சென்ற இதழில் அட்லாண்டா பக்கத்தில் விட்டுப் போனவை.
வாசகர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். ஜூலை இதழில் CAMANA என்ற அமைப்பு கர்நாடக சங்கீதத்தை அட்லாண்டாவிற்கு வழங்குகிறார்கள் என்று தவறாக எழுதியதற்கு வருந்துகிறோம்.
கர்நாடக சங்கீதம் மாதம் தவறாமல் இருக்கிறது. CAMAGA என்ற அமைப்பு இதை பெரிய பெரிய பாடகர்களைக் கூட்டிவந்து எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ரசிகர்கள் கொடுக்கும் டொனேஷன் வைத்து அழகாக, அமைதியாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடத்துகிறார்கள். நடத்தும் திரு. ஸ்ரீராம், திரு. வெங்கடேசன், திரு. ரங்கராஜன் மற்றும் அனைவரும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். CAMAGAவைப் பற்றி விரைவில் இன்னும் வரும். நிச்சயம் அவர்கள் சேவை உங்களுக்குத் தெரியவேண்டும்.
சினிமா தியேட்டரில் போய் பார்க்க நேரம் இல்லாதவர்களுக்கு பிரியா இம்போர்ட்ஸ் ஒரு வரப்பிரசாதம். திரு. தாமோதரனின் "பிரியா இம்போர்ட்ஸ்" வீடியோ கடையில் கிடைக்காத தமிழ் படமே கிடையாது. 5000 டைட்டிலுக்கு மேல் வைத்திருக்கிறார். வீடியோ டேப், ஆடியோ டேப், வி.சி.டி., டி.வி.டி என்று எல்லாம் உள்ளது. தெலுங்கிலும் கிட்டத்தட்ட இவ்வளவு டைட்டில்ஸ் உண்டு. U.S.A வில் எங்கு வேண்டுமானாலும் (குக்கிராமமோ, பெரிய நகரமோ) தபாலில் அனுப்புகிறார். நல்ல சேவை. அடாடா அதை நினைவு படுத்திவிட்டேனா? சேவை சாப்பிட ஆசை என்றால் (சேவை) அரைக்கும் "சாந்தாஸ்" தரமான மெஷின்களை திருமதி சங்கீதா குமார் அவர்கள் விற்கிறார்கள். (தோசை, இட்லி, சேவை, வடை, அடை) பிரச்சனை இல்லை. வீட்டிலேயே வெளுத்துக்கட்டலாம்.
நாவிற்கு இனிய நல்ல பல இந்தியன் வெஜ் & நான் வெஜ் ரெஸ்டாரண்ட்ஸ் உண்டு. யாரோ சொன்னார்கள் இப்போது அட்லாண்டாவில் 40 இந்தியன் ரெஸ்டாரண்ட்க்கு மேல் உள்ளது என்று. "அப்பாடி" ஒரு 5 அல்லது 6 வருடங்களுக்கு முன்னால் நிச்சயமாக 10 கூட தேறாது. இன்று அவ்வளவு வளர்ச்சி. அட்லாண்டாவில் "மசாலா தோசை"யை அறிமுகப்படுத்தியது யார்? என்பது ஒரு சுவையான விஷயம். அது விரைவில் வரும்.
அட்லாண்டாவில் நிறைய நாட்டியப் பள்ளிகள் உள்ளன. பரத நாட்டியம் தவிற குச்சிபுடி, லைட் மியூசிக் டான்ஸ், வட நாட்டு ஸ்டைல், தென்னாட்டு ஸ்டைல் என்று பல வகை நடனங்களை நன்றாக சொல்லிக் கொடுக்கிறார்கள், அதையெல்லாம் எழுத ஒரு இதழ் போதாது. நாட்டியப் பள்ளிகள், பரத நாட்டியத்திற்கு நாட்யாஞ்சலியைப் பற்றி சொல்லவேண்டும். திருமதி சந்த்ரீகா சந்திரன் அவர்கள் இந்தப் பள்ளியை 12 வருடங்களாக நடத்திவருகிறார்கள். வழுவூர் ராஜரத்தினம் பிள்ளை, ராமைய்யா பிள்ளையின் சிஷ்யை. நல்ல நடனசிகாமணி வெகு நன்றாக நடனம் ஆடுவார் அதேபோல் சொல்லியும் கொடுப்பார். குறைந்தது 25 ஸ்டூடெண்ட்ஸ் உண்டு. வீக் எண்ட்ஸில் படு பிஸி. இப்போது அவரது வாரிசும் அவரிடம் நடனம் கற்றுக்கொண்டு சிறப்பாக ஆடுகிறார். வாழ்த்துக்கள்.
நன்றி.
அட்லாண்டா கணேஷ் |