ஆகஸ்ட் 2002 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக

1. பாதி மறை நடத்தை தா, மாற்றத் தேவையான அளவின்மை (5)
6. உயர்தர கர்வத்தில் இடைத்தொழிலர் (4)
7. ஏற்றவாறு சிணுங்கலில்லாச் சீவல் தரும் செய்தி (4)
8. சம்பா பாய நெல் நுனி கலந்து விருந்தில் இடம்பெறும் (6)
11. மெய்யற்ற கதிரில் கடும் மாற்றம் புத்திமதி சொல்லும் (6)
14. பழங்காலம் தொடங்கி தேராட்டம் (4)
15. நீண்ட காலம் மென்மையாகத் தொட இறுதியில் சுகம் (4)
16. ஒரு பக்கக் கதையில் இது இருக்காதோ?! (5)

நெடுக்காக

2. யமுனை தொடங்குமிடம் வேட்கை அடக்க கணவன் வீடில்லை (4)
3. பாரதியாரின் நூலைத் திருத்தியமைத்தப் பாயில் குட்டு (6)
4. எல்லோருக்கும் தெரியும்படி சுரந்த ரதி தலையீடு (4)
5. தவழ்ந்து செல் தேவையற்ற பிரச்சனை சிண்டுமுடிவோர்க்கு சுவாரசியமாகும் (5)
9. முன்னோர்களிடமிருந்து வந்த சுமை புரவி, முயல் இடையே (6)
10. நேற்று வந்தவன் புல் நுனி கொண்டது வயதின் கோளாறு (5)
12. கருத்தை முதன்மையாகக் கொண்ட படம் வஞ்சகர் இயல்பா? (4)
13. சுகம் தரும்படியான இந்தியத் தமிழர் மானக் கட்சியா? (4)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக:1. போதாக்குறை 6. தரகர் 7. தகவல் 8. பால்பாயசம் 11. திரிகடுகம் 14. பாரதம் 15. வருடம் 16. மையக்கரு

நெடுக்காக:2. தாயகம் 3. குயில்பாட்டு 4. ஊரறிய 5. ஊர்வம்பு 9. பாரம்பரிய 10. புதியவன் 12. கபடம் 13. இதமாக

© TamilOnline.com