தேவையான பொருட்கள்
Zucchini - 2 மோர் - 2 கப் (புளித்த கெட்டியான மோர்) பச்சை மிளகாய் - 4 அரிசி - 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் - 2 கப் தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தாளிக்க கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
அரிசி, துவரம் பருப்பு, சீரகம் இவற்றை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
Zucchini ஐ நறுக்கி உப்பு போட்டு வேகவிடவும். (உப்பு முதலில் போடுவதால் காய் நீர்விட்டுக் கொள்ளும். பின்னால் தேவையானால் இன்னும் நீர் சேர்க்கலாம்)
ஊற வைத்த அரிசி, பருப்பு, சீரகத்துடன் பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
அரைத்த விழுதை வெந்த Zucchiniயில் கொட்டி மோர்விட்டு (மோர் புளிப்பு இல்லாவிட்டால் தக்காளி அல்லது புளி சேர்க்கலாம்) ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கடுகு சீரகம் சிறிது உளுத்தம் பருப்பு தாளித்து கொட்டவும்.
இறக்கி வைக்கும் போது கொத்தமல்லி, கறிவேப்பிலை போடவும்.
மீரா சிவக்குமார் |