Zucchini கொத்சு
தேவையான பொருட்கள்

Zucchini - 2
வெங்காயம் - 1
தக்காளி - 2
ப. மிளகாய் - 3
மிளகாய் வற்றல் - 1
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
புளி - சிறிது
வெல்லம்/சர்க்கரை - சிறிது
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

செய்முறை

Zucchini, வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கவும்.

பச்சைமிளகாய் வாயை கிறி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், கடுகு, கடலை பருப்பு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் இவற்றை வதக்கவும்.

Zucchiniஐ போட்டு சிறிது வதக்கவும்.

தக்காளி சேர்க்கவும். புளியை கரைத்து நன்கு கொதிக்க விடவும்.

சாம்பார் பொடி, உப்பு சேர்த்து பொடி வாசனை போனதும் வெல்லம்/சர்க்கரை சிறிது சேர்க்கவும்.

இது பொங்கல், உப்புமா, இட்லி ஆகியவற்றிக்கு தொட்டுக் கொள்ள உகந்தது.

மீரா சிவக்குமார்

© TamilOnline.com