Zucchini துகையல்
தேவையான பொருட்கள்
Zucchini - 2
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 5
உப்பு, புளி - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 2 - 4 ஸ்பூன்

செய்முறை

Zucchiniஐ நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.

உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றை பொன்நிறமாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்து எடுத்து வைக்கவும்.

வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு Zucchiniஐயை வதக்கவும்.

வதக்கிய Zucchini, உப்பு, புளி இவற்றை சேர்த்து அரைக்கவும்

முன்பு செய்து வைத்த பொடியை போட்டு சேர்த்து கலக்கி வைக்கவும்.

மீரா சிவக்குமார்

© TamilOnline.com