Zucchini சட்னி
தேவையான பொருட்கள்
Zucchini - 1(சிறியதாய் இருந்தால் 2)
வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய் தூள் - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1
பொட்டுக் கடலை - 1/2கிண்ணம்

செய்முறை

Zucchini ஐ நறுக்கி வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். வெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் எண்ணெய்விட்டு வதக்கவும்.

மிக்ஸியில் பொட்டு கடலையை பொடி செய் எடுத்து வைக்கவும். தேங்காய் தூள், வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் அரைக்கவும்.

பிறகு தக்காளி, வதக்கி Zucchini இவற்றையும் அரைக்கவும்.

பாத்திரத்தில் அரைத்த பொருட்களை உப்பு சேர்த்து கலக்கவும். தேவையானால் சிறிது எலுமிச்சம் பழம் பிழியலாம். கடுகு தாளித்து கொட்டவும். தக்காளியை வதக்கியும் அரைத்துப் போடலாம்.

மீரா சிவக்குமார்

© TamilOnline.com