மிளகு தட்டை
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 3 ஆழாக்கு
உ. பருப்பு - 1/2 கரண்டி
மிளகு - 1 கரண்டி
வெண்ணெய் - 1/2 கரண்டி
உப்பு - தேவையானது
எண்ணெய் - 3 ஆழாக்கு
பொட்டு கடலை மாவு - 1/2 ஆழாக்கு
கடலை பருப்பு - 1/2 ஆழாக்கு

செய்முறை

மிளகை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். அரிசி, உ. பருப்பு இவற்றை முறுக்கு மாவை போல் தயார் செய்யவும்.

கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி மாவு, உ. மாவு, வெண்ணெய், ஊறிய மிளகு, கடலை பருப்பு, பொட்டு கடலை மாவு, உப்பு ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் விட்டு பிசையவும்.

மிளகு ஊறிய தண்ணீரையும் விடவும். சிறு உருண்டையாக உருட்டி பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி அதில் போட்டு தட்டவும். எண்ணெய் காய்ந்ததும் வேகவிட்டு ஓசை அடங்கியதும் எடுத்து வைக்கவும்.

குறிப்பு

மிளகு அதிக நேரம் ஊறுவதலாம் உறைப்பு அதிகம் இராது. மிளகு விறுவிறுப்பு தேவை இல்லையென்றால் மிளகு போடாமலும் செய்யலாம்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com