கலி·போர்னியவில்ல் உள்ள ·பெர்மாண்ட் நகரில் ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நகர மேம்பாட்டிற்கும், அடிப்படை சுகாதார வசதிகளுக்கும் தேவையான நடவடிக்கைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஐந்து உறுப்பினர்கள் தான் முடிவு செய்கின்றனர். எந்த ஒரு தீர்மானமும் இந்த மன்ற உறுப்பினர்களின் பெரும்பாலான ஆதரவு இருந்தால் தான் நிறைவேற்றப்படும்.
நவம்பர் 5, 2002 அன்று இரண்டு உறுப்பினர் களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேதியில் தான், மாநில, மாகாண, county மற்றும் ·பெர்மாண்ட் நகர தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஒருவர் குடியுரிமை பெற்றவராகவும், அதே சமயம் பதிவு செய்தவராகவும் இருக்கவேண்டும். வாக்களிக்க இன்னமும் பதிவு செய்யவில்லை என்றால் Registrar of Voters Office, Alameda Countyக்கு 510.272.6935 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம்.
நகர மக்கள் தொகையான 311,000ல் ஆசிய இந்தியர்களின் பங்கு 9% சதவிகிதம் (அல்லது 28,000 வாக்காளர்கள்). இத்தகவலை US Census Bureau, Census 2000 data தெரிவிக்கிறது.
நம்மில் ஒருவரான திரு. ஷியாம் சேதல் இந்தத் தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளார். திரு. சேதல் ·பெர்மாண்ட் நகரில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவருகிறார். ஆசிய இந்தியர்களின் தேவைகளை நன்கு அறிந்தவர் அவர். ஒரு பொறியியல் வல்லுனரான திரு. சேதல் ரியல் எஸ்டேட் மற்றும் போக்குவரத்தில் அனுபவம் மிக்கவர். இந்திய வம்சாவழியினரின் குரலை சபையில் ஒலிக்கவைக்கும் திண்ணிய எண்ணம் கொண்டவர் அவர். அதனால் திரு. ஷியாம் சேதலை ஆதரிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். |