சத்யராஜின் இக்கட்டு
ரஜினிகாந்த் இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் "பாபா"வில் சத்யராஜ் நடித்திருப்பார். சூப்பர் ஸ்டார் தனது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கவேண்டும் என்று ஆசை பட்டார். தயாரிப்பாளர் துரை ரஜினியின் விருப்பத்தை சத்யாராஜிடம் தெரிவித்தார். பின்னர் சத்யாராஜ் "பாபா" படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று ரஜினியை நேரில் சந்தித்து தான் இப்படத்தில் நடிக்க முடியாத காரணத்தைத் தெரிவித்தார். "நான் எனது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன்.

இத்தருணத்தில் நான் கெளரவ வேடத்தில் நடித்தால் அது எனது தயாரிப்பாளர்களை பாதிக்கும்" என்று அவர் ரஜினியிடம் தெரிவித்தார். அவரது இக்கட்டைப் புரிந்து கொண்ட ரஜினி, அந்த வேடத்தில் "பாரதி" புகழ் சாயாஜி ஷிண்டேவை நடிக்க வைத்தார்.

-

© TamilOnline.com