Dear Ann Landers
ட்ரிங்... ட்ரிங்... laptop ன் சப்தத்தையும், overhead projector ன் மெல்லிய ஒலியையும் அவமானப் படுத்துகிற மாதிரி, என்னுடைய செல்போன். நியூயார்க்கின் பிரபலமான financial accounting company CIO உடன் என்னுடைய software demo போய்க் கொண்டிருக்கிறது. என் கம்பெனியின் CRM software ஒன்பது இடங்களில் கடந்த 6 மாதங்களில் விற்பனை ஆகி இருந்தது. இதுவும் கிடைத்த தென்றால், company ன் clientele double digitக்குத் தாவுகிறது. Very important and significant milestone is our fight for survival in these hard times.

கீத், என் partner and பரமதோஸ்த். 'Is everything ok?" கேள்விகுறியுடன் பார்த்தான். என்னுடைய செல்போன் நம்பர் என் மனைவி சீயாமாவுக்கும், கீத்துக்கும் மட்டும்தான் தெரியும். ஆபீஸ் செகரட்டரி கூட பேஜர் மூலமாகத்தான் கம்யூனிகேட் பண்ணுவாள். நான் 'excuse me, let me take this call; Keith will continue with the presentation" என்று CIO John Hunter-ம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஜன்னலோரம் மறைந்தேன் என் செல்போனை காதில் மடக்கிக் கொண்டு. 37வது மாடி, கீழே wallstreet மெதுவாக உயிர் பெற்றுக் கொண்டு, இன்னொரு வாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

என் மனைவிதான், சீயாமா என்கிற ச்யாமளி. காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது ஐந்தரை மணி. மன்ஹாட்டனுக்குள் நுழைவதற்கு காலை 6 மணி முதல் பன்னிரண்டு மணி வரை எல்லா பாலங்களிலும் டனல்களிலும் இரண்டு பேருக்கு மேலாகத்தான் allowed. இல்லாவிட்டால் போலீஸ் ஏக கெடுபிடியுடன் செக் பண்ணி, திருப்பி விடுவார்கள். அவளுடன் போய் வருகிறேன் என்றுகூட சொல்ல முடியாமல் பேய் மாதிரி ஒட்டிக் கொண்டு, 6 மணிக்கு மூன்று நிமிஷம் முன்னால் Holland tunnelயை எட்டிவிட்டேன். she can't be calling me about that. அவள் அந்த டைப் கிடையாது. 'yes, என்னம்மா ச்யாமா?'' என்றேன்.

'ஏங்க உங்க மீட்டிங்கைத் தொந்தரவு பண்ணினதற்கு மன்னிக்கணும். இப்பதான் உங்க சித்தப்பா பையன் குமார்கிட்டேருந்து போன் வந்தது.'' குமார் என் சங்கரன் சித்தப்பாவின் மூத்த பையன். அபிராமபுரம் பிளாட்டில் தனியாக இருக்கும் அம்மா, அப்பாவுக்கு ஒரே பாதுகாப்பு. ''உங்க அப்பா எப்படி சொல்றதுன்னு தெரியலைங்க'' என்று அழ ஆரம்பித்தாள்.

என் கண்கள் என்னை அறியாமலேயே பனித்து விட்டன.

பட்டை பட்டையாக விபூதி போட்டுக் கொண்டு, சந்தனம் குங்குமம் மத்தியில் வைத்துக் கொண்டு, காலையில் தவறாமல் சூரியநமஸ்காரம் பண்ணி, ஆதித்ய ஹ்ருதயம் சொல்லும் அப்பா. வயிற்றை ஏகமாக பந்தொன்று சுருட்டிக் கொண்டது. இப்பதான் ஆகஸ்ட்டில் அறுபதாம் கல்யாணத்திற்கு போய் விட்டு வந்தோம் குடும்ப சகிதமாக.

'கூடவே வாங்கோ' என்ற என் பேச்சை மறுத்தவர், 'வருஷத்துக்கு ஒரு தடவை பாத்துண்டா போதும்டா'. இப்பதான் நீ வந்துட்டுப் போற. நெக்ஸ்ட் இயர் நாங்க ஏப்ரலில் வருகிறோம், ஆறு மாசத்துக்கு'' என்றவர். அம்மாவை நினைக்கும் போது மனது கொஞ்சம் கனத்தது. நாற்பத்து நான்கு வருட குடும்ப வாழ்க்கை. கண்ணிலிருந்து நீர் பெருகியது. 'நீங்க உடனடியாக வீட்டுக்கு போன் பண்ணுங்க. சித்தப்பா, சித்திதான் இப்ப அம்மா பக்கத்துல இருக்காங்களாம். இன்னிக்கு திங்கள்கிழமை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இருக்கு. நீங்க மட்டும் இப்பவே கிளம்பிடுங்க. நான் உங்க லக்கேஜயும், பாஸ்போர்ட் எல்லாம் தயார் பண்ணி வைக்கிறேன். நான் உங்களை ஏர்போர்ட்டில் மீட் பண்ணுகிறேன். இப்பல்லாம் ரொம்ப செக்கிங் காம். நீங்க ஏர்லைனை கூப்பிட்டு எக்கானமி இல்லாட்டி பஸ்ட் கிளாஸ் ஒரு டிக்கெட்டுக்கு எற்பாடு பண்ணிக்குங்க. நான் பேங்க் வேற போகணும்!''

கீத் உடனடியாக புரிந்து கொண்டான். என் உடன்பிறவா சகோதரன். என் சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ''few minutes bio break" என்று அறிவித்தான். அருகே வந்து தோளில் கைவைத்து, 'You take care as your family. That comes first, no matter what. My sympathies are with you and your mum. You've got to go." வெளியே வந்து elevatorன் அருகில் நின்று வீட்டுக்குக் கூப்பிட்டேன், சென்னை சித்தப்பாதான் எடுத்தார். "வந்து கொண்டிருக்கிறேன்'' சொன்னேன். எனக்காக வெயிட் பண்ணச் சொன்னேன்...

ஆச்சு. இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. அடுத்த வாரம் நான் கிளம்பணும். சித்தப்பாவிடம் பேசினேன். 'அம்மா இங்கே இனிமே தனியாக இருக்கக்கூடாது. என்னுடனே வந்து விடட்டும்'' என்றேன். அம்மாவுக்கும் இஷ்டமே இல்லை. அரைமனதாக ஒப்புக் கொண் டாள். சித்தப்பா எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்வதாக சொன்னார். அவர் நல்ல மாதிரி. என் அப்பாவின் ஒரே கூடப்பிறந்தவர். நம்பிக்கையானவர்.

கவலையில்லாமல், பிரிட்டிஷ் ஏர்வேஸில் ஏறினோம். அம்மாவின் அழுகை தாங்க முடிய வில்லை. 'குழந்தைகள் எல்லாம் உன்னை எதிர்பார்த் துண்டு இருக்கு, என்னோடதான் நீ இருக்கணும்' என்று தைரியம் சொன்னேன்.

என் பத்துவயது பையன் ப்ரசன்னாவும், ஏழு வயது ப்ரீதியும் பாட்டியுடன் அட்டையாக ஒட்டிக் கொண்டன. கஷ்டப்பட்டு தமிழில் பேசி, பாட்டியைச் சிரிக்க வைக்க முயற்சித்தன. அன்று சனிக்கிழமை வெளியில் டிசம்பர் மாதத்துக்கே உரிதான பனியும், காத்தும், மைனஸ் 10 டிகிரியில் உறைய வைத்தன. 'பாட்டி Brockக்கு இன்னிக்கு 8வது பிறந்தநாள். நீங்களும் என்னோட வரணும் என்று ப்ரீதி தனக்கு தெரிந்த தமிழில் அழைப்பு விடுக்க, அம்மாவுக்கு மறுக்க மனதில்லை. புடவையை மாத்திக் கொண்டு, பெரிய கோட், முகத்தை மறைக்கிற மாதிரி குல்லாய், கையில் தடிமனான gloves, snow boots சகிதம் வேனில் ஏறமுடியாமல் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

Brockன் வீட்டில் clown show. Clown ஆக வந்தவர் என் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த handyman Eddie. இது அவருடைய இன்னொரு பார்ட் டைம் வேலை. இரண்டு மணி நேரம் போனதே தெரிய வில்லை. சில magic activities, clown acts என்று அம்மாவே மனதை விட்டு சிரித்தாள். அம்மாவுக்கும் pink colour ல் பூனைக்குட்டி baloon கொடுத்தார். கிளம்பும்போது Eddieக்கு அம்மாவை அறிமுகம் செய்து வைத்தேன். அப்பாவின் சேதி அவருக்கும் தெரிந்திருக்கிறது. மனதார வருத்தம் தெரிவித்தார். தான் clown மாதிரி பார்ட் டைம் பண்ணுவது தன் கவலைகளை மறப்பதற்காகவும், குழந்தைகளோடு சிரித்திருக்கவும்தான் என்று சொன்னார். அவர் 57 வயதில் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டவர். இரண்டுமே முறிவில் உடைந்தன. 2 and 7 years. முதல் மனைவிக்கு Anoreia. இரண்டாவதுக்கும் இவருக்கும் 2 அழகான பெண்குழந்தைகள். இவர் குடும்பத்துக்கு உதவியாக இல்லை, வீட்டை சரியாக கவனிக்கவில்லை என்று விவகாரத்து வாங்கி, மூன்றாம் மாதமே திருமணம் புரிந்து கொண்டு வேறு ஊருக்கு குடி போய்விட்டாள். Eddie, தனிக்கட்டை, yankee fan!

அம்மா B.A.B.Ed. ஊரிலிருக்கும் கான்வென்ட் ஸ்கூலில் மிடில் ஸ்கூல் டீச்சர். English Accent கொஞ்சம் இருந்தாலும், fast learner, easy to adapt. எல்லாரையும் கவர் பண்ணுகிற பேச்சு சாதுர்யம், Eddieக்கு அம்மாவை ரொம்பவும் பிடித்துவிட்டது. மறுநாள் வீட்டிற்கு basementல் check பண்ண வந்த Eddie அம்மாவிடம் இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். அம்மா அவருக்கு மிளகு ரசம், ''சூப்'' என்று போட்டுக் கொடுத்தாள். கண் மூக்கெல்லாம் நீர்வடிய, சிவந்த முகத்துடன் சிரித்துக் கொண்டே குடித்தார். அம்மாவின் கவலை, சோக ரேகைகள் மறைந்து கொண்டே வந்தன. அப்பாவின் மறைவுக்கு முன் இருந்த பழைய அம்மாவாக மாற ஆரம்பித்தாள். Eddie வாரத்துக்கு இரண்டு, மூன்று தடவை வீட்டிற்கு வந்து போனார் handy work எதுவும் இல்லாமலேயே. அம்மாவுக்கும் பொழுது இப்போது போகிறது. முன்னெல்லாம் வெறும் news paper மட்டும்தான் படிப்பாள், இப்ப கொஞ்சம் கொஞ்சமாக soap opera, talk shows என்று பார்க்க ஆரம்பித்தாள். அம்மாவுக்கு ann Laniessன் column மிகவும் பிடிக்கும். தங்களுடைய வாழ்வின் பிரச்சினை களை, உறவின் முரண்பாடுகளை Annனிடம் பகிர்ந்துக் கொண்டு solution கேட்பார்கள். படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

அம்மாவுக்கு தினமும் வாக்கிங் போகும் பழக்கம். ஒரு மணிநேரமாவது நடக்கணும். மத்தியானம் ஒண்ணரை மணிக்கு காப்பி போட்டுக் குடித்துவிட்டு, ஷ¥, குல்லாய், கிளவ்ஸ் சகிதம் கிளம்புவாள். மூன்று மணிக்கு குழந்தைகள் ஸ்கூல் பஸ் வருவதற்குள் திரும்பி வந்து விடுவாள். அன்று வாக்கிங் கிளம்பும் போது சூரியன் பிரகாசமாய் இருக்க, ''அம்மா குல்லாய், கிளவ்ஸ் இல்லாமல் ஷ¥வை மட்டும் மாட்டிக் கொண்டு கிளம்ப, கொஞ்ச நேரத்தில் இருட்டிக் கொண்டு மழை ஆரம்பித்து விட்டது. வேகமாகத் திரும்ப வர எத்தனிக்கையில், ஈரப்புடவை ஷ¥வின் velcroவில் மாட்டிக்கொண்டு கால் தடுக்க, pedestrian walkல் கீழே விழுந்து, வலது முட்டியில் சரியான அடி. நல்லவேளை Eddie எங்கள் வீட்டுக்கு வரும் வழியில் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. அவர் தன்னுடைய பிக்அப் ட்ரக்கில் அம்மாவை ஏத்திக் கொண்டு வீடு சேர்த்து முதலுதவி பண்ணியிருக் கிறார். அவர்களின் நட்பு இன்னமும் வலுத்தது.

அன்று இரவு குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு ஆபீஸ் ரூம்க்குள் வந்த ச்யாமளி, என் 'Dear Ann Landers' letterயை கம்ப்யூட்டரில் படித்துவிட்டு சிரித்தாள். Alt + F4 போட்டு fileஐ save பண்ணாமல் exit பண்ணினாள். 'என்னங்க, உங்களுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்துவிட்டதா? ஊரில் கவலையுடன் தனியாக மோட்டு வளையைப் பார்த்து சோகமே உருவாக உக்கார வேண்டாம்னுதானே இங்க அழைச்சுண்டு வந்தீங்க? அவங்களோட சந்தோஷத் தையும், நிம்மதியையும் ஏன் கொலை பண்றீங்க? Eddieயும் இப்பதான் வாழ்க்கையின் இருண்ட பாதையின் முடிவில் ஒளியைக் கண்டு கொண்டிருக் கிறார். அவர்களுடைய புதிய உறவு பழைய உறவுகள் எதையும் complicate பண்ணாமல் இருக்கும்போது, நீங்க ஏன் அந்த சந்தோஷ பலூனை உடைக் கிறீர்கள்?!! எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

குழப்பத்துடன் கீழே இறங்கி வந்த என்னை, அம்மா உற்சாகத்துடன் வரவேற்றாள். 'Two Minutes கிழிச்சு மாட்டாறான்!'' டிவியில் world series. Yankees vs Diamondbacks. அம்மாவின் கையில் ஒரு ஸ்வெட்டர், ப்ரவுன் அண்டு ப்ளூ கலரில் உருவாகிக் கொண்டி ருந்தது. Eddie க்காக!.

அசோக்குமார்

© TamilOnline.com