தமிழ் கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவும் ஓர் இணையதளம் http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/
தமிழ் இணையதளங்களில் இது சற்று வித்தியாசமான இணையதளம். 'தமிழைக் கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவும் பென்சில்வானியப் பல்கலைக்கழக இணைய தளத்திற்கு உங்கள் வருகை நல்வரவாகுக'. என்று வரவேற்கும் இந்த இணையதளத்திற்கு, பென் மொழி மையத்தின் ப்ராஜெக்ட் ஆன இதற்கு Consortium for Language Teaching and Learning பகுதி நிதியுதவி செய்துள்ளது. சிக்காகோ, கார்னெல் மற்றும் பென்சில்வானியா பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் இந்தக் கூட்டு முயற்சியில் பங்குபெற்றுள்ளனர்.
ஆரம்பநிலை, இடைநிலை, முதிர்நிலை, மற்றும் இதரவகையில், இந்த தளத்தில் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் அரிச்சுவடி முதல், வாக்கிய அமைப்பு, உச்சரிப்பு என்று தொடங்கி சமகால இலக்கியம் வரை தொட்டு நிற்கிறது.
தமிழ் ரேடியோ நாடகங்கள், சினிமா கிளிப்பிங்குகள் கொண்டும், தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சு வழக்குகளை அறிந்து கொள்ள ஏதுவாக வகை செய்யப் பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு, கர்ணன் திரைப்படத்தில் இருந்து ஒரு சிறு காட்சியும் வசனமும் இடம் பெற்றிருக்கிறது. டாக்டர்.சீர்காழி கோவிந்த ராஜனின் பாடல்கள் ஒலி வடிவிலும், எழுத்து வடிவிலும் ஒருங்கே இடம் பெற்றுள்ளது.
online-லேயே, ஒரு வார்த்தையின் சொல்லும் முறையையும், எழுதும் முறையையும் அறிந்து கொள் ளவும், அறிந்த தமது திறமையை சரிப்பார்க்கவும் வசதியுள்ளது.
ஆரம்பநிலை, இடைநிலை, முதிர்நிலை, வகை களுக்கு ஏற்ப பயிற்சி தேர்வுகளில் கலந்து கொண்டு நம் விடைகளை மெயில் மூலம் ஆசிரியருக்கு அனுப்பி வைக்கலாம்.
ஆரம்ப நிலையில் உள்ள இது போன்ற தேர்வுகள், சுவாரஸ்யம் மிக்க விளையாட்டினுடாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
முதிர்நிலையில், ஜெயகாந்தனின் யுகசந்தி சிறு கதை தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம் பெற்றிருக் கிறது. அதைத் தொடர்ந்து தமிழ் உரைநடைக்கான பயிற்சியும், கேள்விகளும் இடம் பெற்றிருக்கின்றன.
இதே போன்று சுஜாதாவின் அரிசி சிறுகதையும், சிறுகதையின் ஊடாக பேச்சு வழக்கில் உள்ள தமிழ் வார்தைகளுக்கு ஆங்கில வார்த்தைகளும் Hyper link-ல் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழ் குழந்தை களுக்கும், முறையான தமிழில் ஆர்வம் காட்டுபவர் களுக்கும் இந்த தளம் ஒரு பொக்கிஷமாகும். தமிழக கல்வி நிலையங்கள் கூட இந்த தளத்தை சிறப்பாகப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/ என்ற முகவரியில் இந்த தளத்தைப் பார்வையிடலாம். இந்த தளத்தைப் பற்றி எத்தனை எழுதினலும், இந்த தளத்தை ஒரு முறை பார்வையிடுவதற்கு ஈடாகாது. அந்த வகையில் பென்சில்வானியப் பல்கலைக்கழகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பென் மொழி மையத்தின் ப்ராஜெக்ட், தமிழ தவிர 36 உலக மொழிகளிலிலும் இது போன்ற சேவையைத் தொடர்ந்து வருகிறது. |