விணை தீர்க்கும் வினாயகனே
பல்லவி

விணை தீர்க்கும் வினாயகனே
உந்தன்
மலரடி பணிந்தேனே

அனு பல்லவி

ஸன்னிவேல் ஸன்னிநிதியில்
காட்சியளித்து
எழில்வுடன் வீற்றிருக்கும்
மலைமகள் பாலனே (வினை)

சரணம்

தஞ்ச மென்றவர்க்கு சஞ்சலம் தீர்த்திடும்
குஞ்சரமுகத்தோனே குமரேசன் சோதரனே
சங்கரன்மைந்தனே சக்தி கணேசனே
மக்கள் துயர் தீர்க்கும் மாபெரும் தேவனே (வினை)

அம்பா ராமநாதன்

© TamilOnline.com