தேவையான பொருட்கள் பேரிச்சம் பழம் - 300 கிராம் வெல்லம் - 300 கிராம் மைதா - 400 கிராம் ஏலக்காய - 4 நெய் - கொஞ்சம் தேங்காய் துருவல் - 1 சிறிய கப் எண்ணெய் - தேவையான அளவு கேசரி பவுடர் - சிறிது பச்சை கற்பூரம் - சிறிது
செய்முறை
மைதாவை சிட்டிகை உப்பும் கேசரி பவுடரும் சேர்த்துத் தண்ணீர் விட்டுப் பிசைந்து 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறவிடவும்.
பேரிச்சம் பழத்தைப் பொடியாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு அதில் பழங்களைப் போட்டு நன்றாக வேகும் வரை வதக்கி வெல்லமும், தேங்காயும் அதில் போடவும்.
ஏலக்காய்ப்பொடி போட்டு பச்சைக் கற்பூரமும் சேர்த்து கெட்டியான பூரணம் செய்து கொள்ளவும்.
மைதாமாவை சிறிது எடுத்து பிளாஸ்டிக் கவரில் லேசாக எண்ணெய் தடவி மா¨த் தட்டை போல் தட்டி நடுவில் பூரணம் வைத்து மெல்லியதாக வட்டவட்டப் போளிகளாகத் தட்டவும்.
அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டு சிறிது நெய் தடவிஅடுப்பை நிழல்போல் எரியவிட்டுப் போளியைப் போட்டு இருபுறமும் நெய்விட்டு எடுக்கவும்.
தங்கம் ராமசுவாமி |