சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி
தேவையான பொருட்கள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
மைதா மாவு - 500 கிராம்
ஏலக்காய், நெய் - கொஞ்சம்

செய்முறை

சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக அலம்பி பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நாலு ஸ்பூன் நெய்யை விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய கிழங்குகளைப் போட்டு, அதனுடன் ஒரு சிட்கை உப்புப் போட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.

பாதி வெந்தவுடன் வெல்லத்தைப் போட்டு நன்றாக கிளறவும். கெட்டியாக ஆனவுடன் ஏலக்காய் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மைதாமாவில் சிட்டிகை உப்பு போட்டு போளிக்குப் பிசைவது போல் பிசைந்து எண்ணெய் கொஞ்சம் விட்டு ஊற வைக்கவும்.

ஊறியவுடன் வள்ளிக்கிழங்கு பூரணத்தை வைத்து சிறு சிறு போளிகளாகத் தட்டி அடுப்பில் தோசைக் கல்லைப் போட்டு போளிகளை அதில் போட்டு சுற்றிலும் நெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

தேவையானல் சிறிது தேங்காய் துருவலும் போட்டு செய்யலாம்.

தங்கம் ராமசுவாமி

© TamilOnline.com