தேவையான பொருள்கள் மைதாமாவு - 1/2 கப் கோதுமை மாவு - 1/2 கப் சர்க்கரை - 400 கிராம் எண்ணெய் - பொரித்து எடுக்க ஏலக்காய் - 4 கேசரி பவுடர் - கொஞ்சம்
செய்முறை
இரண்டு மாவையும் ஒன்றாகப் போட்டுத் தண்ணீர்விட்டு பிசைய வேண்டும்.
சிறு சிறு அப்பளங்களாக மடித்து இட்டு முக்கோணவடிவத்தில் செய்து வைக்கவும்.
பிறகு இதை எண்ணெய்யில் கரகரப்பாக பொரித்து எடுக்கவும்.
சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு ஏலக்காய், கேசரி பவுடர் சேர்த்து கெட்டிப் பாகு செய்து கொள்ளவும்.
செய்து வைத்துள்ள பூரிகளை அதில் ஒவ்வொன் றாகப் போட்டு இருபுறமும் பாகு நனைய வைத்து எடுத்துத் தாம்பாளத்தில் தனித் தனியாய் வைக்கவும்.
தங்கம் ராமசுவாமி |