தேவையான பொருட்கள் தேங்காய்த் துருவல் - 1 கப் ரவை - 1/2 கப் மைதா மாவு - 300 கிராம் வெல்லம் - 300 கிராம் ஏலக்காய், பச்சைக் கற்பூரம் - சிறிது எண்ணெய் நெய் - 1 கரண்டி கேசரி பவுடர் - 1 துளி
செய்முறை
ரவையை வாணலியில் நெய்விட்டுச் சிவக்க வறுத்துத் தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் தேங்காய்த் துருவல் போட்டு வெல்லம் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
பிறகு ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போட்டு பூரணம் செய்து கொள்ளவும்.
மைதாவில் சிட்டிகை உப்பும், கேசரி பவுடரும் போட்டு நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு எலுமிச்சையளவு மைதா மாவை எண்ணெய் தடயி பிளாஸ்டிக் கவரில் வைத்து சிறிய வட்டம் போல் தட்டி நடுவில் ரவை தேங்காய்ப் பூரணம் ஒரு சிறு உருண்டை வைத்து நன்கு மூடிப் போளியை வட்டமாகத் தட்டித் தோசைக் கல்லில் நெய் விட்டுத் தடவி மிதமான அடுப்பு சூட்டில் போட்டு எடுக்கவும்.
இதற்கு வெல்லத்திற்கு பதில் சர்க்கரையைக் கரைய விட்டு ரவையைப் போட்டுக் கிளறியும் செய்யலாம்.
தங்கம் ராமசுவாமி |