ஆகஸ்டு 2006: குறுக்கெழுத்துபுதிர்
குறுக்காக

5. மாடிக்குப் போ, மாடு (2)
6. அமெரிக்காவின் மலையை அடக்கும் உலகம் காட்டும் மன உறுதி (6)
7. கிடைத்த ஒருவாய்த் தண்ணீருக்குள் மூழ்கியது (4)
8. உலகம் தழுவிய அயர்லாந்து, கிர்கிஸ்தான், லக்ஸம்பர்க் முன்னோடிகள் (3)
9. பிறவியின் தொடக்கத்தை துக்கத்தின் தொடக்கமாக்கிய முனிவர் (3)
11. இட்லி செய்யத் தேவையானது தீர்ந்ததுவிட்டதா? வாசலில் தொங்கவிடலாம் (3)
13. கீழைக் கடல் தீவு எந்திரங்களுடன் தொடர்பு கொள்ளவதற்கேற்றது (4)
16. மான்யம் சிதைய கனி உண்டவள் தமிழச்சியா, பெத்லஹேமைச் சேர்ந்தவளா? (6)
17. சாமிக்கு கொடு, முதல் சாமியின் தொழில் செய் (2)

நெடுக்காக

1. மூன்றெழுத்தின்றி வாலறுந்ததாய் மாறிய அந்த சமயம் (4)
2. சுங்குடியின் தலைப்பு துவைத்த உதறலில் நாக்கறிந்தது (5)
3. உலக அதிசயம் இங்கு வந்து பாருங்களேன் (3)
4. தன்னையே மறந்து மங்கிய தோற்றம் (4)
10. விரிந்த மானசா நிலவின் உட்புறம் கலந்தாள் (5)
12. ஓர் முள்ளெடுத்த முன்னாள் ஓவியர் சுற்றிய நகரம் (4)
14. கதகதப்பூட்டும் ஒரு தானியம் கொடு (4)
15. முற்றுப்பெறாத் தன்மை தமிழின் வகை (3)


வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஆகஸ்டு 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@ chennaionline.com. ஆகஸ்டு 25க்குப் பிறகு, விடைகளை http://thendral. chennaionline.com என்ற சுட்டியில் காணலாம்.

ஜூலை 2006 புதிர்மன்னர்கள்

1. சிங்காநல்லூர் கணேசன்
2. பகலவன் கிருஷ்ணமூர்த்தி, சான் ஹோசே
3. L.V. நாகராஜன், மௌவுன்டன் வியூ

புதிர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத் துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.

குறுக்காக: 3. மூவேந்தர், 6. திருந்து, 7. பிணக்கு, 8. சமையல் கலை, 13. மன்னார்குடி, 14. விழுங்கு, 15. ஆபத்து, 16. சொல் அம்பு

நெடுக்காக: 1. அதிரசம், 2. பந்தயம், 4. வேப்பிலை, 5. தணிக்கை, 9. கடன், 10. வேர்ப்பலா, 11. படித்துறை, 12. அழுகல், 13. மகுடம்

© TamilOnline.com