தேங்காய் போளி
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - 1 பெரிய கப் வெல்லம் - 300 கிராம் மைதா மாவு - 300 கிராம் ஏலக்காய் - 4 கேசரி பெளடர், பச்சை கற்பூரம், உப்பு - 1 சிட்டிகை நெய் - கொஞ்சம்
செய்முறை
மைதாமாவில் சிட்டிகை உப்பும், கேசரி பெளடரும் சேர்த்துத் தண்ணீர் விட்டுப் பிசைந்து 1/2 கரண்டி எண்ணெய் விட்ட ஊற விடவும்.
தேங்காய்த் துருவலை வெல்லம் சேர்த்துக் கொழ்க்கட்டைக்குச் செய்வது போல பூரணம் செய்து கொள்ளவும், ஏலக்காயும் பச்சைக் கற்பூரம் பூரணத்தில் சேர்க்கவும்.
மைதா மாவில் சிறு எலுமிச்சை அளவு எடுத் பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி அதில் வைத்து தட்டையாகத் தட்டி நடுவில் பூரணத்தில் சிறு உருண்டை போல் தட்டவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கல்லில் நெய் தடவி போளியைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்து வைக்கவும். மேலாகவும் சிறிது நெய் தடவி வைக்கலாம்.
தங்கம் ராமசுவாமி |