கொழுக்கட்டை பலவிதம்
மேல் மாவு

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கோப்பைகள்
தண்ணீர் - 4 கோப்பைகள்

அரிசியை நன்கு கழுவி, 4 கோப்பை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் நன்கு வடி கட்டவும். மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அரைத்த மாவை சலித்தெடுத்து அகன்ற தட்டில் காயவைக்கவும்.

செய்முறை

மேல் சொன்ன முறையில் தயார் செய்த அரிசி மாவு, தண்ணீர் 2 கோப்பைகள், எண்ணை - ஒரு ஸ்பூன்

அடிகனமான பாத்திரத்தில் 2 கோப்பை தண்ணீரை விடவும். ஒரு ஸ்பூன் எண்ணையை இத்தோடு சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசி மாவை சேர்த்து நன்கு கிளரவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு (sim) 3-4 நிமிடங்களுக்கு விடாமல் கிளரவும். பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, 20 நிமிடங்கள் மூடிவைக்கவும். பின்னர் மாவை எடுத்து நன்கு பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com