தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 2 கப் சர்க்கரை சிரப் - 1 1/2 கப் பால் - 2 கப் பாதாம் பருப்பு - 15 முந்திரி பருப்பு - 25 பிஸ்தா பருப்பு - 15 திராட்டை உலர்ந்தது - 1 மேசைக்கரண்டி பேரீச்சை பொடியாய் நறுக்கியது - 2 தேக்கரண்டி செர்ரிபழம் - 2 மேசைக்கரண்டி ஏலக்காய் - 5 நெய் - 1/2 கப் கேசரி பவுடர் - சிறிது
செய்முறை
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து பின்பு வடிய விடவும்.
ஒரு வாணலியில் நெய்விட்டு அதில் அரிசியை நன்றாக வதக்கி 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும். பின்பு பாதாம், முந்திரி 15, பிஸ்தா இவற்றை நெய்விட்டு வறுத்து ஒன்றிரண்டாகப் பொடி செய்து வைக்கவும்.
பேரீச்சை, திரட்சை இவற்றை நெய்விட்டு வறுத்து வெந்த அரிசியுடன் சர்க்கரை சிரப், பழம், பொடியைப் சேர்த்து கேசரி பவுடர், குங்குமப்பூ, ஏலக்காய் பொடி ஆகியவற்றை போட்டு செர்ரி பழத்தை பொடியாய் நறுக்கிப் போட்டு நன்றாக கலந்து பாக்கியுள்ள முந்திரி பருப்பை நிறைய நெய்விட்டு வறுத்து மேலாகப் போட்டுக் கிளறி வைக்கவும். இது மிகவும் சுவையான சத்துள்ள ஒரு புலாவ்.
தங்கம் ராமசாமி |