Dialog
ஆபிசில்: டேய் ‘பாபா’ எப்படி?

அட போப்பா

******


புதியதாக வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருக்கும் சங்கரன், தொலைபேசியில்:

எப்பா, நம்ம நெட்வொர்க் செக்ஷனுக்கு! உடனே ரெண்டு டீ கொண்டு வரியா

மறுமுனையிலிருந்து குரல்: கண்டிப்பாக இந்த முறை அனுப்புகிறேன், ஆனா அடுத்த முறை கஷ்டம்தான்.

சங்கரன்: என்னய்யா, பிசியோ.

குரல்: ஆமா, நீங்க டயல் பண்ணது மார்க்கெடிங் செக்ஷனுக்கு, பேசறது மானேஜர் சுரேஷ். அடுத்த முறை கேண்டீனுக்கு டயல் பண்ணுங்க பிளீஸ்.

******


மச்சி! எக்கானமி கோஸ் செளத் (economy goes south) அப்படிங்கறாங்களே அப்படின்னா என்னன்னு சொல்லேன்.

வாரத்துக்கு அஞ்சு தமிழ் படமாவது முன்னேல்லாம் வீடியோல பார்ப்போம், இப்ப பிராஜக்டு இல்லாம சும்மாம இருக்கறச்சே வாரத்துக்கு 2 படம்னு ஆக்கிட்டம்ல, அதுவும் sharing வேற, அதான்.

******


நண்பர் வீட்டில்:

அம்மா! 'டிவி' ல பாரு, ARTHUR பிரோக்ராம்ல, Arthur அவன் தாத்தா பாட்டியோட இங்கிலீஷ்லதான் பேசறான்.

என்ன மட்டும் ஏம்மா, தாத்தா பாட்டிக்கிட்ட பேசறச்சே தமிழ்லதான் பேசணும்னு சொன்ன?

******


டெக்னாலஜி எக்ஸிபிஷன் ஒன்றில்:

டேய் சாகர், இத பாரு! இந்த பேனா தண்ணிருக்கு அடியிலேயும், மற்றும் ஸ்பேஸிலேயும் கூட எழுதுமாம். வேடிக்கையாயில்ல.

என்ன பெரிய வேடிக்கை, கொஞ்சம் கூடப் பிரயோஜனம் இல்லாத ஒண்ணு. தண்ணிக்கடியில வச்சு பேப்பரில எழுத முடியுமா? பேப்பர் நனைஞ்சிடாது!. மேலும் ஸ்பேசில பேப்பர் பறந்து போயிடும். அவன் தான் சொல்லறான்னா, நீ கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணு மாமா.

எதுக்கோ தெரியுமா எதோட வாசனைம்பாங்களே. உன்ன புத்திசாலின்னு நினைச்சு உன்ன இங்க கூட்டிக்கிட்டு வந்தேன்பாரு, என்ன நானே அடிச்சிக்கணும்டா.

ஸ்ரீ கோண்டு

© TamilOnline.com