அன்றும் இன்றும் இயக்குநர் விசு
அன்று

சில பல வருடங்களுக்கு முன் எழு சின்னக்குழுவுடன் அமெரிக்க நகரங்களில் நாடகம் போட வந்ததேன். அந்த நாடகங்களை sponsor செய்தவர் Atlanta கணேஷ் (நியூஜெர்சி பார்கவா சுந்தரராஜன் மூலமாக) நாடகத்தின் பெயர் 'ஆல் ரவுண்டர் அம்மையப்பன்' 57 நாட்கள் அமெரிக்கப் பயணம், 19 இடங்களில் நாடகம். ஒரு பிறவி அமெரிக்கரே அந்த அளவு அமெரிக்¡கவைச் சுற்றி பார்த்திருக்க முடியுமா என்ற அளவில் அமெரிக்காவை criss cross ஆக சுற்றி னோம். Miami சென்னை ஆகியது. Boston பண்ருட்டி ஆகியது! அந்த அளவு ஒவ்வொரு அமெரிக்க நாடுடனும் பரிச்சயம் ஏற்பட்டது. thanks to Atlanta Ganesh.

நாடகத்தின் மையக் கருத்து இதுதான்! அமெரிக்காவுக்கு வேலைக்காக செல்லும் சந்தர்ப்பத் தில் ஒருவர் தன் தாயை இந்தியாவில் அநாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு அமெரிக்கா செல் கிறார். முதல் நாடகம் Nasnviue என்ற இடத்தில். நாடகத்துடனான ரிகர்சல் அமெரிக்காவில் அட்லாண்டா கணேஷ் வீட்டில் நடந்தது. தீயை மிதித்தது போல் பார்த்தார் அட்லாண்டா கணேஷ். தனியாக என்னை ஒரு ரெஸ்டாரென்டுக்குக் கூட்டிச் சென்றார்.

விசு 57 நாட்கள் அமெரிக்காவில் இருக்கப் போகிறாய். 19 இடங்களில் நாடகம் போடப் போகிறோம். ஆனால் தவறான subject உடன் அமெரிக்கா வந்திருக்கிறாயே! பெற்ற தாயை அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு அமெரிக்கா வந்த ஒருவனைப் பற்றி கதை எழுதப்பட்டிருக்கிறதே. இதை அமெரிக்க வாழ் தமிழர்கள் ரசிப்பார்கள் என நினைக்கிறாயா? என்று கேட்டார்.

அவர்கள் ரசிக்கிறார்களா, இல்லையா என்பது என் பிரச்சனை இல்லை. நான் ஒரு message சொல்லி யாக வேண்டும். இந்தக் கதையை இந்தியாவில் பலரிடம் படித்துக் காட்டினேன்! நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என்றேன்.

"அமெரிக்காவுக்கு வர முடியாதவன் வயிற்றெரிச் சலில் அப்படித்தான் சொல்வான். இந்த உலகத்தில் பலருக்கு பொறாமையே வாழ்க்கையில் அஸ்தி வாரமாக அமைந்து இருக்கிறது'' என்றார் கணேஷ்.

''அம்மாவை அநாதை ஆசிரமத்தில் விட்டுவிட்டு அமெரிக்கா வந்தவர்கள் இல்லை என்கிறயா கணேஷ்'' இது நான்.

''இருக்கலாம். ஆனால் ஓரிரு உதாரணங்கள் இலக்கணங்கள் ஆகிவிடமுடியாது'' - இது கணேஷ்.

''என்ன செய்ய சொல்கிறாய்'' இது நான்.

''கதையை மாற்று... டைம் இருக்கிறது...'' இது கணேஷ்.

''சாரி கணேஷ்! இதுதான் கதை மாற்ற இயலாது. இந்த நாடகத்தைத் தான் போடப் போகிறேன். இஷ்டம் இருந்தால் மேடை ஏற்று! அல்லது அடுத்த பிளேனில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவிடு'' இது நான்.

ஒரு நீளமான சிகரெட்டை ஆழமாக இழுத்தார் கணேஷ். சில பல நிமிஷங்கள் யோசித்தார். ''உன்னையும் உன் குழுவையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உங்களை நான் அமெரிக்காவுக்கு கூப்பிட வில்லை. உனக்குப் பிடித்த இந்த நாடகத்தை நீ அரங்கேற்று! ஆனால் இந்த நாடகம் எனக்கு பிடிக்கவில்லை என்பதை மட்டும் சொல்ல என்னை அனுமதி. அதுவும் தவிர you are going to respect என்றார்.

எழுந்து வந்து விட்டோம்.

சலசலப்புக்களும் முணுமுணுப்புக்களும் 19 இடங்களிலும் இருந்தது. ஆனால் தொடர்ந்து 19 இடங்களிலும் என் நாடகம்... சாரி... பிடிவாதம் அரங்கேறியது.

இன்று

எனது மகள்களுக்கு அமெரிக்க மாப்பிள்ளைகள் கிடைத்தவுடன் துள்ளிக்குதித்தேன்!

12.09.02 - சான்பிரான்சிஸ்கோவில் எனது மூத்த மருமகன் வீட்டில் இரண்டாவது தடவையாக வந்திருக்கும் எனது சம்பந்தியும் அவரது மனைவியும் flash ஆக வந்து போகிறார்கள்.

டெட்ராய்ட் நகரில் எனது இரண்டாவது மருமகன் வீட்டில் முதல் தடவையாக வந்திருக்கும் எனது இரண்டாவது சம்பந்தியும் அவரது மனைவியும் flash ஆக வந்து போகிறார்கள்.

எனது மூத்த மருமகளும், இரண்டாவது மருமகளும் பிரசவ காலத்தில் இருந்த போது ஓடியாடி ஒரு தாயைப் போல கவனித்த யூனியன் சிடி ஜெயந்தி flash அக வந்து போகிறார்கள்.

மூத்த பெண் வளைகாப்பு நிகழ்ச்சியை பெயர் தெரியாத பார்க் ஒன்றில் நடத்திய அந்த 30 பெண் முகங்களும் flash ஆக வந்து போகிறார்கள் (Baby shower)

நானும் என் மனைவியும் எங்களது கல்யாணத்துக்குப் பிறகு இதுவரை நான்கு முறை அமெரிக்கா வந்த போது, அவ்வப்போது walking சென்ற போது எதிரே நடந்து வந்த, எங்களுக்கு good morning/good evening சொன்ன முகம் தெரியாத பல இந்திய முதியவர்கள் flash ஆக வந்து போகிறார்கள்.

ஒவ்வொரு தடவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் அமெரிக்கா வந்த போதும் ஆகாய விமானத்தை அ¨ட்த்துக் கொண்டு வந்த அந்தப் பல பல பெரியவர்கள் flash ஆக வந்து போகிறார்கள்.

அந்த நாடகத்தை அன்று எழுதி இருக்க வேண் டாமோ, கணேஷ் பேச்சைக் கேட்டு நாடகக் கதையை மாற்றி இருக்கலாமோ என்ற எண்ணமும் flash ஆக வந்து போனது.

அனாவசியமாக பலரது மனதை ரணப்படுத்தி விட்டோமோ என்ற எண்ணமும் flash ஆக வந்து போனது.

என்னை நானே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கொண்டேன். எனது மனசாட்சியை நீதிபதி ஆக்கினேன். மனசாட்சியின் தீர்ப்பு இதுதான்:

''விசு! அன்றைய காலக்கட்டத்தில் அமெரிக்கா சென்ற விமானங்களை மட்டும் நீ பார்த்திருக்கிறாய். ஆனால் அவைகளில் ஏறும் வாய்ப்பு உனக்கு கிடைக்கவில்லை. அதனால் உன்னையும் அறியாமல் அவர்கள் மீது உனக்கு ஒரு பொறாமையும் வயிற் றெரிச்சலும் ஏற்பட்டு இருக்கிறது. அதன் வெளிப் பாடுதான் அந்த நாடகம். மனித தவறுகளைச் சுட்டிக்காட்ட ஆண்டவன் மனித உருவில் வருவான். அப்படி வந்த கணேஷின் பேச்சையும் நீ கேட்க வில்லை. அ¦ரிக்காவில் இருக்கும் தமிழ் மக்களும் மனிதர்கள். அவர்களுக்கும் ஆசை/பாசம்/தாகம்/அன்பு எல்லாம் உண்டு. பொருளாதாரத்திற்காக அசுர ஓட்டம் ஓடுவது தவறு இல்லை.

அசிங்கமான சில உதாரணங்கள் எல்லா இடங் களிலும் உண்டு. அவைகள் மட்டுமே அன்று உன் கண்ணில் பட்டது. அழகான பல உதாரணங்கள் அமெரிக்கா முழுவதும் உண்டு. அவைகள் இன்று உன் கண்ணில் பட ஆரம்பித்து இருப்பது உனது மனதில் உள்ள அழுக்கைத் துடைக்க!

அழுக்கையம் அவனே ஏற்படுத்துகிறான்
அதை துடைப்பவனும் அவனே!

© TamilOnline.com