கொத்துமல்லி புலாவ்
தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 2 கப்
கொத்துமல்லி - 1 கப் (நறுக்கியது)
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
லவங்கப்பட்டை - சிறுது
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 சிறு துண்டு
முந்திரி பருப்பு - 6
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

வாணலியில் நெய்விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை, தனியா இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து கொண்டு, அரிசியை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

பின்பு ஊறவைத்ததை வடிய வைத்து நெய் விட்டு சற்று பிரட்டி உப்பு போட்டு அளவான தண்ணீர் விட்டு வேகவிடவும்.

கொத்துமல்லியை அரைத்து நெய்விட்டு வதக்கி பச்சை மிளகாய் இஞ்சியைப் பொடியாய் நறுக்கி அத்துடன் சேர்த்து வதக்கி அரிசியுடன் போட்டு பொடி செய்த மசாலாவையும், அதில் போட்டு மூடி வேக விடவும்.

நன்கு வெந்தவுடன் எடுத்து முந்திரி பருப்பு வறுத்துப் போட்டு மேலாக சிறிது நெய் சுட வைத்து விடவும்.

இது மிகவும் ருசியான புலாவ். பசுமையான கலராக இருக்கும். இதே போல புதினா, ஸ்பீனாச்சிலும் செய்யலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com