கனடியத் தமிழரும், தகவல் தொழில் நுட்பமும்
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் நடாத்துகின்ற ஜந்தாவது தமிழ் இணைய மாநாடு 2002, உலகலாவிய தமிழ் மக்கள் அனைவருக்கும் பெருமை தருகின்ற ஓர் விடயமே. எம் அருகே அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் இம்முறை மாநாடு நடைபெறுவது, கனடாவில் வாழுகின்ற இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களுக்கு மேலும் பெரும் மகிழ்ச்சி தருகின்றதாகவே அமைந்துள்ளது. இம் மாநாடு தனது இலக்குகளை எய்தவும், அது தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமான வழிகாட்டலாகவும் அமைய எம் ஆசிகளையும், முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் நிற்கின்றோம்.

நவீன தகவல் தொழில்நுட்பத்தில் உலகில் முன்னணியில் நிற்கும் ஒரு இனக்குழுமமாக தமிழர்கள் நிற்கின்றார்கள் என்றால் அது மிகையில்லை. அதிலும் அத்துறையில் உள்ள வர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு அதில் தம் இனம் சார்ந்த வகையில் மேலும் முன்னேற்றம் காண விழைந்து நிற்பது எனைய இனக்குழுமங்களுக்கும் ஓர் சிறந்த எடுத்துக ;காட்டாக அமைந்துள்ளது.

இந்தவகையில் நவீன தகவல் தொழில ;நுட்பத்தில் தமிழின் பயன்பாட்டை நீண்ட காலத்திற்கு முன்பே முயன்று அதில் கணிசமான வெற்றியையும் கண்டு, ஒரு காத்திரமான பங்களிப்பை நல்கி, ஒரு பாரிய அங்கமாக உள்ளனர் கனடியத் தமிழர்கள். தொழில் சார்ந்த முயற்சியானாலும் சரி, கல்வி சார்ந்த முயற்சியானாலும் சரி, வானொலி, பத்திரிகை, இணையத்தளங்கள் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆனாலும் சரி, பாரிய முன்னேற்றம் தகவல் தொழில் நுட்பத்தில் காணப்பட்டதாகவே கனடியத் தமிழர் முயற்கிகள் காணப்படுகின்றன.

குறிப்பாக தமிழர் வர்த்தக முயற்சிகள் ஒருக்கிணைக்கப்பட்டு அவை தகவல் தொழில் நுட்பத்தின் துணைகொண்டு மேலும் விரிவாக்கம் கண்டு வருகின்றன. கனடாவில் இருந்து வெளி வரும் 10க்கு மேற்பட்ட தமிழ் வாரஇதழ்களில் பல அச்சமைப்பில் புதிய கணனித்தொழில் நுட்பத்திற்கு இணைவாக பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதுடன், இணைத்தளங்களைத் தனியாக கொண்டுள்ளவையாகவும் அமைந்துள்ளன. வானொலித் துறையில் 24 மணிநேர தமிழ் வானொலிகளைக் கொண்டவர்களாகவும், அவற்றை இணையத்தளவாயிலாக உலகம் முழுவதும் கேட்கக் கூடியவர்களாகவும் மாற்றியவர்களில் கனடியத் தமிழர்கள் முன்னணி யிலேயே திகழ்கின்றனர். கனடாவைத் தளமாகக் கொண்ட வாசகர்கள் எண்ணிக்கை கூடிய இணையத்தளங்கள் எண்ணில் அடங்கா.

இந்தவகையில் எங்கிருந்தாலும், நாம் தமிழ்த்தாயின் மைந்தர்கள். எம்முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படுவதும், தொழில்நுட்ப வளர்ச்சிகளை எம் இனத்தின் முழுமையாக பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து எம் இன வளர்ச்சிக்கு தொடர்ந்தும் காத்திரமான பங்களிப்பை நல்குவதும் எம்மனைவரின் பாரிய பணியாகும். இன்றைய இத் தொழில் நுட்பங்கள் அன்று இருந்திருக்குமானால், தமிழர் பொக்கிசமான யாழ். நூலகம் இனவெறியர்களால் அழித் தொழிக்கப்பட்ட போது அதனை நாம் முழுமையாக இழந்திருக்க மாட்டோம் என்பது திண்ணம். இந்தவகையில் இம் மாநாடு கனடியத் தமிழரைப் பொறுத்தவரையில் ஒரு அறிமுகமாக அமைந்தாலும், வரும் மாநாடுகளில் பாரிய பங்களிற்பிற்கு கனடிய தமிழர் சமூகம் தயாராகி வருகின்றது என்ற மகிழ்ச்சி தரும் தகவலையும் இம் மாநாட்டில் கூடியுள்ள அமைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கின்றோம்.

குயிலன்

© TamilOnline.com