அக்டோபர் 2002 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக:

5. எல்லைகளற்ற விருப்பம் கொண்ட கட்டி வெல்லம் (6)
6. கொத்து! பயத்தில் நடுங்குதே! (2)
7. கவிதையொடு கிராமத்து மக்கள் வயலுக்கு நீர் செலுத்துதல் (4)
9. முதியவரும் காவற்காரனும் பகைத்த டில்லிவாசியிடம் வைத்திருப்பது (4)
10. ஊர்க்குருவி துண்டுபட பாராட்டு (4)
12. இயக்குபவன் கள் உண்ட தலையின்றித் தடவு (4)
13. அளவான ஆசை மருந்து செய்வது (2)
14. மாலை மாற்ற காளை கேட்பது (6)

நெடுக்காக:

1. வாலற்ற மாடு தரும் உரம் (2)
2. முதற் சங்க சக்தி மனதில் அலை (4)
3. தேர்தலில் அளிப்பதை டில்லி முதல்வர் தலையீடு அளிப்பது வழக்கம் (4)
4. கேட்பதற்கு அன்பு உள்ளே தைக்க ஆண்டவனை மறுக்கும் (6)
8. வாணிபப் பொருளொன்றை சிவன் சடையில் சுமப்பான் (6)
11. தெருவில் வம்பளப்போரிடம் சிவ விருட்சம் (4)
12. உரக்கச் சொல்ல ஒரு சுரம் வெட்டு (4)
15. உள்ளேயேதுமற்ற சணற்பை கூடியுள்ள குழு (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக: 5.கருப்பட்டி 6.குலை 7.பாசனம் 9. கைத்தடி 10.ஊக்குவி12.கடவுள் 13.பொன் 14.வரதட்சணை
நெடுக்காக: 1.எரு 2.சபலம் 3.வாடிக்கை 4.பகுத்தறிவு 8.சரக்கொன்றை 11.வில்வம் 12.கத்தரி 15.சபை

© TamilOnline.com