தமிழ்க் கல்வி
அமெரிக்காவில் தமிழ்க் கல்வி:
பள்ளிகள் திறக்கும் நேரம்


மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம்; இனநலம்
எல்லாப் புகழும் தரும். (குறள் 457)
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

தமிழ்பேசும் நன்னாட்டிலிருந்து தொலை தூரம் வந்துவிட்டோமே என்று எண்ண இடம் கொடுக்காமல், பல தமிழ் அமைப்புகளும் அமெரிக்காவில் ஆங்காங்கே தமிழ் கற்றுக் கொடுக்கின்றன. ஆங்கிலமே பேசி அமெரிக்கச் சூழலில் வளரும் குழந்தைகள் இங்கே அகர வரிசையில் தொடங்கி தமிழைப் பேசவும், படிக்கவும் எழுதவும் முறையாகப் பயில முடிகிறது. தமிழ் ஆர்வலர்களால் ஒரு தன்னார்வ முயற்சியாக நடத்தப்படும் இக்கூடங்களில் இலவசமாகவோ அல்லது பொருட்களுக்கான அடிப்படைக் கட்டணம் மட்டும் வசூலித்தோ வகுப்புகள் நடத்தப் படுகின்றன. சில இடங்களில் பெரியோரும் கற்கின்றனர் என்பதோடு, அமெரிக்கரும் கற்பதுண்டு என்பது வியப்பான செய்தி.

புதிய கல்வியாண்டு தொடங்கும் இந்த நேரத்தில் பல இடங்களிலும் தமிழ் வகுப்பு களும் தொடங்க இருக்கின்றன.

உங்களுக்கு அருகிலும் ஒரு தமிழ் பயிற்று மையம் இருக்கக் கூடும். விவரங்கள் இதோ:

சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி

கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தால்
3 இடங்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களுக்கான நேரடிப் பதிவு கீழ்க் கண்ட பள்ளிகளிலும் ஆகஸ்ட் 27 முதல் தொடங்குகிறது. தவிர www.catamilacademy.org என்ற வலைதளம் மூலமும் பதிய வசதி உண்டு.

தமிழார்வம் கொண்ட சில அன்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கழகம், இப்போது 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர்/ஆசிரியைகள் மற்றும் பள்ளி அலுவலர்களால் நடத்தப்பட்டு, 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் களுக்கு நன்மை பயிற்று வருகிறது. இந்தக் கழகத்தில் பள்ளி மாணவ மாணவியர் களோடு, பெரியோர்களும் தமிழ் மொழியைக் கற்று வருகிறார்கள். மழலையர்களுக்கான (3 வயது நிரம்பிய) ஆரம்ப வகுப்பு முதல், இடைநிலை, கடைநிலை, முதுநிலை, உரையாடல் வகுப்புகள் வரை எல்லா வயதினருக்கும் பாடத்திட்டங்கள் அமைக்கப் பட்டு திறம்பட நடத்தப்பட்டு வருகிறது.

வகுப்புகள் தொடங்கும் நாள்:
செப்டம்பர் 10, 2006, ஞாயிறு
காலை 10:00 - 11:30.

1. ஃப்ரீமாண்ட் கிளை:
Horner Junior School, 41365 Chapel Way, Fremont, CA 94538
தொடர்புகொள்ள:
ஏ.நல்லப்பன் - 510.438.0958, andy.nallappan@gmail.com

2. கூபர்ட்டினோ கிளை:
De Anza College, Cupertino, CA
தொடர்புகொள்ள:
ஸ்ரீவித்யா வேல்சாமி -408.873.8910, srividya.velchamy@gmail.com

3. சான் ஹோஸே (எவர்கிரீன்) கிளை:
Matsumoto School, 4121 Mackin Woods Lane, San Jose, CA
தொடர்புகொள்ள:
தில்லைகுமரன் - 408.267.8006, thillai@sbcglobal.net

அட்லாண்டா
ஃபுல்டன் ஓ.சீ.இ.இ. நூலகத் தமிழ் மையம்.
ஆகஸ்டு மாதம் முதல்
பிரதி சனிக்கிழமையும் இரண்டு
மணி நேரம் வகுப்புகள் நடக்கும்.
கட்டணம் கிடையாது.

பயிற்றுவிப்போர்:
சுந்தரிகுமார், இந்துமதி ரமேஷ், நர்மதா ஜெகந்நாதன், சுந்தரி மெய்யப்பன், தமிழகம் மற்றும் சிங்கப்பூரில் தமிழ்ப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் கு. கோவிந்தசாமி ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். மேலும் பலர் பணியாற்ற முன்வந்துள்ளனர். இங்குள்ள தமிழ்ச்சங்கமும் ஊக்கம் கொடுத்து வருகிறது.

தமிழ்மொழி, பண்பாடு, உரையாடல் பற்றிய பாடங்கள் நடக்கும். அரிச்சுவடி முதல் தாமாகப் படிக்கும் மாணவர் வரை நான்கு நிலை களாகப் பிரித்திருக்கிறோம். மாத இறுதியில் சிறுதேர்வும், ஆண்டு இறுதியில் விரிவான தேர்வும் நடத்தப்படும். கடந்த ஆண்டு மாணவர்கள் தங்கள் மொழித்திறமைகளை நாடகம், பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர்.

தொடர்புகொள்ள:
முனைவர் கு. கோவிந்தசாமி
140 Witheridge Drive, Duluth, G.A. 30097
770.623.3322
swamy2006swamy@yahoo.com

சிகாகோ
செப்டம்பர் 9, 2006 அன்று வகுப்புகள் தொடங்கும். எட்டுப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை இல்லியனாய்சில் பதிவுபெற்ற அமைப்பாகி, உலகத் தமிழ்மொழி அறக் கட்டளையின் மேற்பார்வையில் நடந்து வருகின்றன. சிகாகோ தமிழ்ச்சங்கம், இடை மேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம், மில்வாக்கி தமிழ்ச்சங்கம் ஆகியவை உதவுகின்றன.

வகுப்பின் ஆரம்பம் குறளோடு! வாழ்விற்கு உகந்த, தேவையெனப்பட்ட 10 குறள் களோடும், ஒளவையின் ஆத்திச்சூடியும், தமிழ்த்தாய் வாழ்த்துடனும் அமைந்துள்ளது. வகுப்பு நிலைகள் 'துளிர்கள்' துளிர்கள்-2, மொட்டுக்கள், மொட்டுக்கள்-2, அரும்புகள், அரும்புகள்-2, மலர்கள் என அமைந்துள்ளது. வகுப்பு நிலைகளுக்கேற்ப பாட அட்ட வணையும் அமைந்துள்ளது. தமிழைப் படிக்கவும், எழுதவும் அமையும் இக்காலப் பகுதியில் 10-15 நிமிடங்கள் ''காண்பித்துச் சொல்லல்'' என்ற வடிவில் தமிழில் பேசவும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. ஒரு கதையோ, ஒரு பாடலோ என்று கேட்டு, பாடி வருவது தமிழ்ப் பள்ளி சிறார்களுக்கு மிகவும் பிடித்த மான ஒன்று. 'எங்கள் வீட்டுக் கன்றுக் குட்டி, துள்ளி ஓடும் செல்லக்குட்டி!'' பாடல் சிகாகோ முழுமையும் ஒலிக்கும் பாட்டு தமிழ்ப்பிள்ளை களுக்கு! குறளோடு ஆரம்பமான தமிழ்பள்ளி முடிவதோ ஒரு திருக்குறளும், விளக்கமும் என்ற வகையில் அமைந்துள்ளது. வீடு திரும்பும் பெற்றோர்களும், செல்வங்களும் மனதில் அசைபோட்டுச் செல்ல உதவுகிறது. ''வாழ்வு நூல்'' வள்ளுவர் தந்த திருக்குறள் என்பதை அமெரிக்கத் தமிழ்சிறார்க்கு கற்பிப்பதும் தமிழ்ப்பள்ளிகளின் பெரும் நோக்கமாக அமைந்துள்ளது.

குறிப்பு:
எல்லா இடங்களுக்கும் பொதுவாக தொடர்புகொள்ள, தகவல் அறிய:
தமிழ்ப்பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர்
திரு. வி.சா. பாபு - 708.599.3116 annaiillam@hotmail.com. அணுகவும்.

உங்கள் பகுதியில் புதிதாக தமிழ்ப்பள்ளி தொடங்க வேண்டுமென்றாலும் இவருடன் தொடர்புகொள்ளலாம்.

இடங்கள்:
1. கர்ணி தமிழ்ப்பள்ளி,
5725 Steams School Road,
Gurnee, IL 60031
மூன்று ஞாயிற்றுக் கிழமைகளுக்கு ஒருமுறை (09.17.06 தொடங்கி) காலை 10.00; ஆண்டு முழுதும் வகுப்புகள் உண்டு.

தொடர்புகொள்ள:
அருள் பாலு - 847.856.0940, arulsid@aol.com

2. சாம்பர்க் தமிழ்ப்பள்ளி,
Schaumburg Library, S.W.Corner of Schaumburg and Roselle Road, Schaumburg, Il 60173.
இரண்டு சனிக்கிழமைகளுக்கு ஒருமுறை (9.9.06 தொடங்கி) மாலை 3.00;

தொடர்புகொள்ள:
முரளி - 847.923.0716, muralixx@yahoo.com

3. சாம்பெய்ன்ஸ் தமிழ்ப்பள்ளி
புதிதாகத் தொடங்குகிறது. இடம், நேரம், தொடக்க நாள் முதலியவை விரைவில் அறிவிக்கப்படும்.

தொடர்புகொள்ள:
பிரியா பாலசந்தர் - 217.356.0529, priyachander95@yahoo.com

4. டெஸ்பிளெய்ன்ஸ் தமிழ்ப்பள்ளி,
St. Zachrya Church, 567 W. Algonquin Road, Desplaines, Il 60016.
இரண்டு சனிக்கிழமைகளுக்கு ஒரு முறை (9.16.06) காலை 10.00.

5. டேரியன் தமிழ்ப்பள்ளி
புதிதாகத் தொடங்குகிறது. இடம், தொடக்க நாள் முதலியவை விரைவில் அறிவிக்கப்படும்.

இரண்டு ஞாயிற்றுகிழமைகளுக்கு ஒருமுறை (9.10.06) காலை 10.00.

6. நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி,
North Central College, 30 N,
Brainard St, Il 60540
இரண்டு சனிக்கிழமைகளுக்கு ஒரு முறை (9-9-06) காலை 10.00.

தொடர்புகொள்ள:
சாக்ரடீசு - 630.499.1246, socratesponnusamy@yahoo.com

7. மன்ஸ்டர் தமிழ்ப்பள்ளி,
1329 Fitzgerald Dr., Munster, IN 46321
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் (9.10.06) காலை 10.00

தொடர்புகொள்ள:
கலைச்செல்வி - 219.924.2519, kalai_gopal@sbcglobal.net

8. மில்வாக்கி தமிழ்ப்பள்ளி,
The Sheperd of the Hill church. Pewaukee, WL
இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு ஒருமுறை (9.10.06) மாலை 2.00

தொடர்புகொள்ள:
மீனா வைரவன் - 414.243.9373, mvairavan@gmail.com

ஹியூஸ்டன்
பாரதி கலை மன்றத்தினரால் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடத்தப் படுகிறது. தவிர கேட்டி, உட்லேண்ட்ஸ், சுகர்லேண்ட் போன்ற புறநகரப் பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. விவரங்களுக்கு: www.bkmhouston.org

தமிழ் வகுப்பு நிலைகள் ஆறு. முதல் நிலையில் உயிர் எழுத்து, மெய் எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்படுகிறது. பின்னர் எண்கள், நிறங்கள், உடல் உறுப்புகள், பழங்கள், காய்கள், பூக்கள், மரங்கள், உறவுகள், வாரநாட்கள், உணவு வகைகள், பறவைகள், விலங்குகள் போன்றவகள் சொல்லித் தரப் படுகிறது. இரண்டாவது நிலையில் உயிர்மெய் எழுத்துக்கள் அனைத்தும் எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்படுகிறது. மூன்றாவது நிலையில் இரண்டு எழுத்து வார்த்தையில் தொடங்கி ஐந்து எழுத்து வார்த்தைகள் வரையில் எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்படுகிறது. நான்காவது நிலையில் சின்ன சின்ன வாக்கியங்கள் அமைத்து எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப் படுகிறது. ஐந்தாவது நிலையில் ஆரம்ப இலக் கணங்கள், வினைச்சொல், பெயர்ச்சொல், காலங்கள், ஒருமை, பன்மை, தன்னிலை, முன்னிலை, படர்க்கை கற்றுத்தரப்படுகிறது. ஆறாவது நிலையில் கட்டுரைகள் எழுதவும் படிக்கவும் கற்றுத்தரப்படுகிறது. எல்லா நிலை களிலும், கதைகள், பாடல்கள், திருக்குறள் போன்றவைகளும் இடம் பெறுகிறது.

பதிவுக்கட்டணம்: $25. பாரதி கலைமன்ற உறுப்பினர் குடும்பத்தினருக்கு $20 மட்டும்.

தொடர்புகொள்ள:
டாக்டர் கோபாலகிருஷ்ணன், (ஒருங்கிணைப்பாளர்), 281 578 5685, bkmgopal@yahoo.com

தமிழரசி கணேசன்
(இணை ஒருங்கிணைப்பாளர்),
713 436 0301, tamilg@hotmail.com

தகவல்:
கோபால் (கலிஃபோர்னியா),
கோவிந்தசாமி (அட்லாண்டா),
வி.சா. பாபு (சிகாகோ),
கோபாலகிருஷ்ணன் (ஹியூஸ்டன்).

© TamilOnline.com