புட்டு
(நவராத்திரி வெள்ளிக்கிழமை இதைச் செய்வது வழக்கம்)

தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 2 கப்
தண்ணீர் - 1 கப்
து. பருப்பு - 1/8 கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய்
(பொடி செய்தது) - 1 ஸ்பூன்
வறுத்த முந்திரி - 15 (சிறிதாக உடைத்துக் கொள்ளவும்)
உப்பு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு

செய்முறை

பச்சரிசி மாவை எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக (அதிக நேரம் வேண்டாம் இளம் சிவப்பாக வரும் வரை) வறுத்து ஆறவைத்துக் கொள்ளவும்

தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்க்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு சிறிது சிறிதாக வறுத்த அரிசி மாவைச் சேர்த்துக் கிளறவும்.

துவரம் பருப்பை வேகவைக்கவும். கையில் பிடித்தால் ஒட்டாமல் பிடிக்க வரும் பதமாக இருக்கவேண்டும்.

இட்லி தட்டை எடுத்து அதன் மீது சிறிய துணியை விரித்து, இந்த மாவுக் கலவையை வைத்து பத்து நிமிடங்கள் நீராவியில் வேக விடவும் (இட்லி செய்வது போலத் தான்).

பின்னர் இறக்கி, ஒரு தட்டில் கொட்டவும்.

கடாயில் நெய்யைச் சூடாக்கி முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

1/2 கப் தண்ணீரை சூடாக்கி பொடிசெய்த வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லப்பாகு ஒரு துளி எடுத்து குளிர்ந்த தண்ணீரில் விட்டால் உடனடியாக கெட்டியாகும் பதத்திற்கு இருக்கவேண்டும்.

தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிளரவும். பின்னர் வேகவைத்த அரிசி மாவு மற்றும் துவரம் பருப்பைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி மற்றும் நெய்யைக் கொட்டி நன்றாக கிளறவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com