தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 2 கப் கருப்பு மஷ்ரும் - 1/2 கப் நறுக்கியது சீஸ் துருவல் - 1/2 கப் பால் - 1/2 கப் காரட் துருவியது - 1/2 கப் மிளகு - 1/2 தேக்கரண்டி கிராம்பு - 3 ஏலக்காய் - 4 சீரகம் - 2 தேக்கரண்டி லவங்கப்பட்டை - சிறு துண்டு முந்திரி - 7 மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி நெய் - 1/2 கப் உப்பு - தேவைக்கேற்ப வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
செய்முறை
மஷ்ரூமை முதல்நாள் இரவே ஊற வைக்கவும்.
அரிசியைக் களைந்து 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு வடிய வைத்து நெய்விட்டு வறுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு ஏலக்காய், கிராம்பு, பட்டை, சீரகம், மிளகு இவற்றை வறுத்துப் பொடி செய்து வெங்காயத்தையும் வதக்கி எல்லாவற்றையும் அரிசியுடன் சேர்த்து உப்பு போட்டு வேகவிடவும்.
பிரஷர் குக்கர் வேண்டாம் மூடி போட்ட பாத்திரம் தேவை.
திறந்து பாதி வெந்தவுடன் மஷ்ரூமையும், காரட்டையும் நெய்விட்டு வதக்கி அதில் போட்டு நன்றாக வெந்தவுடன் சீஸ் துருவலையும் முந்திரி வறுத்ததையும் போட்டு எடுத்து சாப்பிடலாம்.
தங்கம் ராமசாமி |