புனித யோவான் லுத்தரன் தமிழ் திருச்சபை
அமெரிக்காவில் முதல் தமிழ் லுத்தரன் திருச்சபை தனது முதலாண்டு விழாவை சிறப்புடன் கொண்டாடியது.

நியூயார்க் மாநகருக்கு அருகேயுள்ள, நாசா கொளண்ட்யில் வில்லிஸ்டன் பூங்கா என்ற சிற்றூரில் தூய யோவான் லுத்தரன் என்ற அழகான ஆலயம் அமைந்துள்ளது. அதில் கடந்த ஒரு வருட காலமாக ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் தமிழ் மொழியில் கிறிஸ்தவ இறைவழிபாடு நடந்து வருகிறது. அமெரிக்காவில் தோன்றி தமிழ் மொழியில் லுத்தரன் திருச்சபை முறையிலான இறைவழிபாடு நடத்தும் திருச்சபை 300 ஆண்டுகளாக தொண்டாற்றி வருகிறது. தமிழ்மொழியை அச்சேற்றி சாதாரண மக்களையும் படிக்க வைத்து மகிழ்ந்த பெருமை அவர்களையேச் சாரும். அந்தப் பாரம்பரிய வரலாற்றில் அமெரிக்காவிலும் இந்த திருச்சபை தமிழ் மொழியில், தமிழ் மக்கட்கு இயேசுவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு இறைபணிச் செய்வது ஓர் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றே. இந்தத் திருச்சபையினர் நியூயார்க் மெட்ரோபகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகளை மக்கட்கு அறிவித்து வருவதுடன் தமிழ் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து அரும்பணியாற்றி வருகிறது.

இந்தத் திருச்சபையினர் தங்களது ஓராண்டு நிறைவை முப்பெரும் விழாவாக செப்டம்பர் 20 முதல் 22 வரை சிறப்புடன் கொண்டாடினர். இவ்விழாக்களில் நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகெட், மேரிலேண்ட், வாஷிங்டன், டிசி போன்ற இடங்களில் அநேக தமிழர்கள் பங்கு பெற்று இறையாசிப் பெற்றுச் சென்றனர். மூன்று நாட்களிலும் இந்தியாவில் இருந்து சகோதரர். ராமையா சாமுவேல் கணேஷ் என்ற பெரியார் இயேசுவின் போதனைகள் அழகாக, நகைச்சுவையுடன் போதித்தார். 20ம் நாள் வெள்ளிக்கிழமை நியூயார்க்கின் ப்ருக்ளின் பகுதிகளில் கூட்டம் நடந்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த திரு. நேசதாஸ் ஜான்சன் அவர்களும் அவரது துணைவியார் திருமதி கற்பகம் ஜான்சன் அவர்களும் ஒழுங்கு செய்திருந்தார்கள். 21ம் நாள் சனிக்கிழமை, மாலை 5 மணியளவில் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் தொடங்கியது. திரு. பிரின்ஸ் சாலமோன் அவர்களது இசை இயக்கத்துடன் திருச்சபையின் பெண் பாடகர் குழுவினர் இனிமையாகப் பாடினர். அதனைத் தொடர்ந்து திருச்சபையின் சிறார்களான டாஸியேல் எட்வர்டு, ஆனி கந்தையா, சூசன் ரெத்தினசாமி கீ போர்டு, வீணை, பியானோ போன்ற இசைக்கருவிகளை வாசித்தனர். அதனை தொடர்ந்து திரு. ஜேக்கப் தேவசகாயம், திரு. நிக்கோலஸ் ஜோசப், திரு. ஜோசப் தினகர் ஆகியோர் ஒரு குறு நாடகம் நடத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தனர். பின்னர் சகோதரர் சாமுவேல் கணேஷ் அய்யா அவர்கள் ஆழமான ஆன்மிக உண்மைகளை பைபிளில் இருந்து மிக எளிய முறையில் எடுத்துரைத்தார்கள். 22ம் நாள் ஞாயிறன்று ஆண்டு விழா சிறப்பு இறைவழிபாடு மாலை 5 மணியளவில் நடைபெற்றது. அவ்வமயம் தமிரல்லாதோர் பலரும் பங்கு கொண்டு திருச்சபையினரை வாழ்த்திச் சென்றனர். திருச்சபைத் தலைவர் திரு. ரவி ராஜு வந்திருந்தோரை வரவேற்றார். பல திருச்சபை போதகர்களான அருள்திருக்கன், டேவிட் பார்ன், ஜோசையா கார்மன் அருளுரையாற்றினார். போதகர் மார்டின் ஆசி வழங்கினார். சகோதரர் சாமுவேல் கணேஷ் அய்யா அவர்கள் தாம் இயேசுவை பின்பற்றியதன் அனுபவங்களை அனைவரது உள்ளம் நெகிழ எடுத்துரைத்தார். தூய யோவான் தமிழ் லுத்தரன் திருச்சபையின் போதகரும், நிறுவனருமான அருள்திரு, எல்வின் ஜான்சன் ரெத்தினசாமி அவர்கள் திருச்சபை ஆலோசனை குழுவினரும் பொறுப்பாளர்களுமான திரு. ஜார்ஜ் ரத்தினராஜா, திருமதி ராணி ரத்தினராஜா. திரு. ஸ்டான்லி வில்லியம்ஸ், திருமதி ஜடா ஸ்டான்லி, திரு. பொன்னம்பலம், திருமதி, சுபா பொன்னம்பலம், திரு. ரவி ராஜு, திரு. ·பிரான்சிஸ் எட்வர்டு. திரு. மனோரஞ்சிதன் கந்தையா, டாக்டர் ரவிக்குமார் ஜான்சன், திருட. நிக்கோலஸ் ஜோசப் ஆகியோரை வாழ்த்தி பாராட்டுச் சான்றுகளும் கொடுத்தார். திரு ·பிரான்சிஸ் எட்வர்டு அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தனர். டாக்டர். ரவிக்குமார் ஜான்சன் அவர்கள் திருச்சபையின் வரலாற்றை வாசித்தளித்தார். திரு. ஜார்ஜ் ரத்தினராஜா அவர்கள் நன்றி நவில்ந்தார்கள்.

-

© TamilOnline.com