'கோவில்பட்டி வீரலட்சுமி' படத்தில் முற்றிலும் கவர்ச்சியே இல்லாத வேடத்தில் நடித்துள்ளார் சிம்ரன். கீழ் சாதிப் பெண் ஒருத்தி தன்னை துன்புறுத்துபவர்களை எதிர்த்து துப்பாக்கி ஏந்திப் போராடும் வேடம் (பூலன் தேவி போல!!). இயக்குனர் ராஜேஷ்வரின் நண்பர்கள் சிம்ரனை ஒப்பந்தம் செய்தால் அவர் தேதிகளில் குளறுபடி செய்வார் என்று எச்சரித்தனர். சிம்ரனின் முழு ஒத்துழைப்பு இயக்குனரை சிம்ரன் புகழ் பாட வைத்துள்ளது. "இந்தப் படத்திற்கு இவருக்கு விருது நிச்சயம்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் ராஜேஷ்வர். நடிகர் நெப்போலியன் சொல்லிக் கொள்ளும் படி ஏதேனும் வேடம் செய்திருந்தால் அது இயக்குனரின் படமான "சீவலப்பேரி பாண்டி" படத்தில் தான். அதனால், சிம்ரன் விருது பெறுவதும், வீரலட்சுமியாக தனது நடிப்பிற்காக பாராட்டுகள் பெறப் போவதில் ஆச்சரியம் இல்லை.
- |