நீண்ட நெடும் பயணம்...
1983ல் 'வெள்ளை மனசு' படத்தின் மூலம் அறிமுகமானார் ரம்யா கிருஷ்ணன். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, இன்றும் அவர் ஒரு பிஸியான நடிகையாகத் திகழ்கிறார். ரஜினிகாந்த் ('பாபா'), கமல் ('பஞ்ச தந்திரம்', படத்தின் பஞ்ச் இவர் தானே), நாகார்ஜுன், சிரஞ்சீவி, ரவிச்சந்திரன், மோகன் லால் போன்ற முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து வருகிறார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனுஜா சந்திரா இயக்கும் இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். பலம் பொருந்திய, தைரியம் மிக்க பெண்கள் கதாபாத்திரங்களைப் படைப்பதில் இந்தி இயக்குனர் தனுஜா வல்லவர். ரம்யாவுக்கும் இது ஒரு மறக்க முடியாத வேடமாக இருக்கும் என்று எதிர்பார்ப் போம்.

-

© TamilOnline.com