Dish TV
“சொந்தக்காரர்களின் பெருமை, அண்டை அயலார்களின் பொறாமை” என்பதற்கு இணங்க செப்டம்பரில் அமெரிக்கத் தமிழர்களிடம் காட்டுத் தீ போல் பரவிய செய்தி என்ன தெரியுமா? வேறு என்ன? “நீங்க சன் டிவி வாங்கிட்டீங்களா?” என்ற தொலைபேசிச் செய்திதான்! ஒரு சில ஆண்டு களுக்கு முன் செயற்கைக் கோள் (சேடிலைட்) வழியாக சன் டிவி வந்திருந்தாலும் அவ்வளவு எளிதாகக் கிடைக்க வில்லை. பின்னர், இணையம் வழியாக வந்த போது பலர் பார்த்தாலும் கணினியும், இணையமும் தேவைப் பட்டதாலும் இன்னும் சில தடங்கல்களாலும் அவ்வளவாகப் பரவவில்லை. பல மொழிகளோடு ஒட்டிக் கொடுத்ததும் ஒரு காரணம்.

இந்த முறை டிஷ் நெட்வொர்க்கோடு இணைந்து செப்டம்பர் 13 முதல் சேன்னல் 610 வழியாக மலிவு விலையான $14.99 க்கே வழங்க எடுத்த முடிவு புத்திசாலித் தனமானது என்று தான் சொல்ல வேண்டும். தானே விற்றுவிடும் என்று விட்டேற்றியாக இல்லாமல், பல தரப்பட்ட வாடிக்கை யாளர்களைச் சென்றடைய நாடு தழுவிய ஊடகங்கள் வழியாக விளம்பரம் செய்வது இந்த முறை தொழில் தெரிந்தவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருக் கிறார்கள் என்பதற்கு அடையாளம். செயற்கைக் கோள் தொலைக்காட்சியே தேவையில்லை என்பவர் கள் கூட இந்த முறை சன் டிவிக்காகச் சேடில்லைட் தொடர்பு வாங்கலாமா என யோசிக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். டிஷ் நெட்வொர்க்கில் கிரிக்கெட் பார்க்கவும் முடியும் என்பதால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என இரண்டையும் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்!

இந்த முறை நேரடி ஒளிபரப்போ, முழுக்க முழுக்கப் பதிவு செய்த காட்சிகளோ இல்லாமல், வெறும் பன்னிரண்டு மணிநேர இடைவெளி விட்டு, இந்தியப் பகல் காட்சிகளை இங்கேயும் பகலில் காட்டி, இரவு நிகழ்ச்சிகளை இரவிலே தருவது வசதியாய் இருக்கிறது. காவேரிப் பிரச்சினை, தமிழ் நடிகர்கள் போராட்டம், சன் டிவிக்குப் போராட்டத்தைப் படம் பிடிப்பதில் தடை என்பது போன்ற செய்திகளை ஊறப்போடாமல், உடனுக்குடன் பார்க்க முடிகிறது. ஆனால், எல்லாமே தமிழ்நாட்டுச் செய்திகள், தமிழ்த் திரைப்படங்கள், அமெரிக்காவின் நிகழ்ச்சிகளை “ஈயடிச்சான் காப்பி” அடித்த கேளிக்கை நிகழ்ச்சிகள் என்ற மசாலா எவ்வளவு நாட்கள் இங்கே ஓடும் எனத் தெரியவில்லை. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் ஓராண்டுக்கு மேலாக சன் டிவி நிகழ்ச்சிகள் ஒளி பரப்பப் பட்டாலும், உள்ளூர்ச் செய்திகளையோ, அந்தந்த நாட்டுக் கலைஞர்களையோ இணைத்து ஏதும் நிகழ்ச்சி வழங்கியதில்லை. அதே போல் அமெரிக்காவிலும் தொடர்ந்தால், சில நாட்கள் கழித்து அமெரிக்கத் தமிழ் நேயர்களுக்கு அலுப்புத் தட்டக் கூடும்.

அடுத்த தலைமுறை அமெரிக்கத் தமிழர்களையும் கவரக்கூடிய நிகழ்ச்சிகள் இருப்பது நல்லது. சிங்கையிலும், மலேசியாவிலும் நடந்ததுபோல், அமெரிக்காவிலும் சன் டிவி பார்த்துக் குழந்தைகள் நல்லதும் கெட்டதும் கற்றுக் கொள்ளுவார்கள். குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிப்பது எளிதாகி விடும்! ஆனால் வயது வந்தவர்களுக்கான படங் களை ஒளிபரப்பும்போது குழந்தைகள் உள்ள வீடுகளில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். செய்திகளைப் படிப்பவர்கள் கண்ட இடத்தில் உடைத்துத் தமிழை உச்சரிப்பது, டாமில் தெர்யாம இங்லீஷ் கலந்து பேசும் “கான்வெண்ட்” டாங்கிலிஷ்காரர்கள் இவர்களின் பாதிப்புகள் கூடலாம். அமெரிக்கத் தமிழர்களுக் காக நல்லதைக் கூட்டிக் கெட்டதைக் குறைப் பார்கள் என்று எதிர்பார்ப்போமா? மேற்கொண்டு சன் டிவி கிடைக்கும் விவரங்கள் அறிய பற்றிய அழைக்க வேண்டிய எண்கள்: 888-887-7264 அல்லது 800-333-DISH (3474).

© TamilOnline.com