கணித்தமிழ் சங்கம்
தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும், தமிழ் அறிஞர்களும் இணைந்து கணிப்பொறியில் தமிழ் பயன்பாட்டை அதிகரித்து தமிழ் மொழியை ஒரு உலகளாவிய தகவல் தொடர்பு மற்றும் வியாபார மொழியாக மாற்றுவோம் என்ற வாசகம் (ஒரு சில பிழைகளோடு) எழுத்தாணி, ஓலைச்சுவடியோடு அமர்ந்திருக்கும் திருவள்ளுவருக்கு அருகே தென்படுகிறது.

தமிழ் தயாரிப்பு நிறுவன செய்திகள் மற்றும் கணித்தமிழ் சங்கச் செய்திகள் இவ்விணையத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

சங்க உறுப்பினர்கள் தமிழ் மென்பொருள் உருவாக்கி கணிணியில் தமிழின் பயன்பாட்டை பரவலாக்குவதற்குத் தேவையான உதவிகளையும், வசதிகளையும் இச்சங்கம் வழங்கிவருகிறது.

சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட இச்சங்கம் ஆண்டுதோறும் கணிப்பொறித் தமிழ் சார்ந்த விழிப்புணர்வு மாநாடுகளையும் நடத்தி வருகிறது.

இச்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கான படிவம், இணையதளத்திலேயே இருக்கிறது. இச்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கு தொழில்நுட்பத்திற்கு ரூ. 500ம், நிறுவனத்திற்கு (Corporate) ரூ. 2000ம் ஆண்டுச் சந்தாவாக செலுத்தவேண்டும்.

கணித்தமிழுக்காக இவ்வளவு செய்யும் இந்தச் சங்கத்தில் சாதனைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டிருப்பது வேதனையைத் தருகிறது.

கணித்தமிழ் சங்கத்தின் நோக்கங்களில் சில:

சங்க உறுப்பினர்களின் உருவாக்கப் பணிகளுக்குத் தேவையான புத்தகங்களையும் வழிகாட்டு நூல்களையும் கொண்ட நூலகத்தை ஏற்படுத்துவது.

விசைப் பலகை வடிவாக்கம், குறியீட்டு நெறிமுறைகள், தமிழ்த் திரை வடிவமைப்பு, கணித்தமிழ்ச் சொல்லகராதி, மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு ஆகியவற்றை தரப்படுத்து.

ஒரு பொதுவான இணையத் தளத்தில் மின்வணிகம் மூலமாக சங்க உறுப்பினர்களின் படைப்புகளை விற்பனை செய்ய உதவி செய்வது.

நிர்வாகிகள்:
தலைவர்:
திரு. ப. செல்லப்பன்

துணைத் தலைவர்:
டாக்டர் வ. கிருஷ்ணமூர்த்தி

செயலாளர்:
திரு. ம. ஆன்டோ பீட்டர்

ஸ்ரீவத்ஸன்

© TamilOnline.com