வெள்ளை அப்பம்
தேவையான பொருட்கள்
அரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - 1 ஸ்பூன் (விழுதாக அரைத்தது)

அரிசி மற்றும் பருப்பினை தனித்தனியே ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். இட்லிக்கு அரைப்பது போல இரண்டையும் (ஒன்றாகச் சேர்த்து) அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள், கருவேப்பிலை, பச்சை மிளகாய் (துண்டுகள்), இஞ்சி விழுது ஆகியவற்றை இந்த மாவில் போட்டு நன்றாக கிளறவும். எண்ணெயை நன்றாக கொத்திக்க விடவும்.

எண்ணெய் கொதித்த பிறகு ஒரு ஸ்பூன் மாவு எடுத்து எண்ணெயில் வட்ட வடிவில் இடவும். இரு புறமும் பொன்னிறமாக மாறியவுடன் எண்ணெயி லிருந்து எடுத்து அதிக எண்ணெயை வடிகட்டவும். தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னியோடு உண்ணலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com