தேவையான பொருட்கள் பச்சரிசி மாவு - 2 கப் உளுத்தம் மாவு - 1/2 கப் பெருங்காயப் பொடி - 1/4 ஸ்பூன் துருவிய தேங்காய் - 1/4 கப் மிளகாய் பொடி - 1 ஸ்பூன் (அல்லது தேவையான அளவு) கடலை பருப்பு - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 1 ஸ்பூன் எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவு
செய்முறை
கடலை பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி மாவு, உளுத்தம் மாவு, ஊறிய கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், பெருங்காயப் பொடி, உப்பு மற்றும் வெண்ணெயை நன்றாகக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவு பிசையவும். சிறிதளவு மாவை எடுத்து வட்ட வடிவில் தட்டிக் கொள்ளவும். கொதிக்கும் எண்ணெயில் இதனைப் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும். அதிக எண்ணெயை வடிகட்டி காற்று புக முடியாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |