தேவையான பொருட்கள் கடலை மாவு - 1 1/2 கப் அரிசி மாவு - 1 கப் உப்பு - தேவையான அளவு மிளகாய் பொடி - 1 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு நெய் (அ) வெண்ணெய் - 3 ஸ்பூன் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி, வெண்ணெய் அல்லது நெய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை நன்றாகக் கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துப் பிசையவும். அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காய்ச்சவும். நாடா அச்சு போட்ட குழலில் இந்த மாவை எடுத்து, கொதிக்கும் எண்ணெயில் பிழியவும். இரு புறமும் நன்றாக பொரிந்தவுடன் எடுத்து அதிக எண்ணெயை வடிகட்டி பாத்திரத்தில் போடவும்.
சரஸ்வதி தியாகராஜன் |