தேவையான பொருட்கள் அரிசி மாவு - 2 கப் உளுத்தம் மாவு - 1 கப் வெண்ணெய் (அ) நெய் - 4 ஸ்பூன் ஜீரகம் - 1 ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரித்தெடுக்கும் அளவு
செய்முறை
அரிசி மாவு, உளுத்தம் மாவு, ஜீரகம், வெண்ணெய் (அல்லது நெய்), உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக கிளறவும். இதில் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் சிறிதளவு மாவை வைத்து, கொதிக்கும் எண்ணெயில் பிழியவும். இரு புறமும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்தெடுக்கவும். அதிக எண்ணெயை வடியவிட்டு பாத்திரத்தில் போடவும்.
சரஸ்வதி தியாகராஜன் |